Helipad: விரைவில் கொடைக்கானல் அருகில் ஹெலிபேட் அமைக்கப்படும் - வான்வழித்துறை வல்லுநர் குழு

author img

By

Published : Nov 25, 2021, 11:03 PM IST

s

கொடைக்கானல் அருகே சின்னப்பள்ளம் பகுதியில் ஹெலிபேட் அமைக்கப்படும் என இந்திய வான்வழித்துறை தொழில்நுட்ப வல்லுநர் குழு ஆய்வு மேற்கொண்டபின் தெரிவித்துள்ளது.

கொடைக்கானல்(திண்டுக்கல்): கொடைக்கானல் மலைப்பகுதியில் ஹெலிபேட் அமைப்பதற்கான இடங்களை இந்திய வான்வழித்துறை தொழில் நுட்ப வல்லுநர் குழு கேப்டன் ஆர்.கே.சிங், பீகே மார்கன், ஜியான் பிரகாஷ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

'Helipad' அமைப்பதன் மூலம் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பல்வேறு தேவைகளையும், மேம்பாட்டுப் பணிகளையும் இதன் மூலம் செய்ய வாய்ப்பு உள்ளதாக வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.

ஹெலிபேட் அமைக்க சின்னப்பள்ளம் பகுதி உகந்த இடம்

இடங்கள் தேர்வு செய்யப்பட்டு இது பற்றிய அறிக்கை அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் சின்னப்பள்ளம் பகுதி ஹெலிபேடு அமைப்பதற்கு உகந்த இடம் என்று தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்திய வான்வழித்துறை தொழில்நுட்ப வல்லுநர் குழு சின்னப்பள்ளம் பகுதியில் ஆய்வு செய்தனர்.

ஆய்வின் முடிவில் இந்திய வான்வழித்துறை தொழில்நுட்ப வல்லுநர் குழுவைச் சேர்ந்த பீகே மார்கன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ’ஹெலிகாப்டர் தரை இறங்குவதற்கு இந்த இடம் ஏற்றது. சின்னப்பள்ளம் பகுதி ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

எங்களது ஆய்வின் அறிக்கை 20 நாட்களுக்குள் ஒன்றிய அரசிற்கு அனுப்பி வைக்கப்படும். இந்தப் பகுதியில் இறங்குதளம் அமைப்பதற்கு உரிய அடிப்படை பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்’ எனத் தெரிவித்தார் .

வல்லுநர்களின் அறிக்கையின் அடிப்படையில் விரைவில் ஹெலிபேட் அமைக்கப்படும் என்று அலுவலர்கள் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் வருவாய்த்துறை மற்றும் சுற்றுலா துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர் .

இதையும் படிங்க: Covid19: அதிகரித்த இறப்பு விகிதம் - 739 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.