கேரளா நரபலி விவகாரம்; பெண்ணின் உடல் பாகங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

author img

By

Published : Nov 21, 2022, 2:20 PM IST

கேரளா நரபலி விவகாரம்

கேரளா மாநிலத்தில் கொடூரமாக வெட்டி நரபலி கொடுக்கப்பட்ட தருமபுரியைச் சேர்ந்த பத்மாவின் உடல் பாகங்கள் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

கடந்த அக்டோபர் மாதம் தருமபுரியைச் சேர்ந்த பத்மா என்பவர் கேரளாவில் காணாமல் போனதாக பத்தனம்திட்டா மாவட்ட காவல்துறையினரிடம் பத்மாவின் மகன் கொடுத்த புகாரின் பேரில் கேரளா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இதே போல் கொச்சி காலடி பகுதியைச் சேர்ந்த ரோஸ்லி என்ற 50 வயது பெண்ணும் காணாமல் போனதாக சில மாதங்களுக்கு முன்பு புகார் வந்தது. இந்த இரண்டு புகார்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது இருவரின் செல்போன் சிக்னல்களும் கேரள மாநிலம் பத்தனம்திட்டா அடுத்த இலந்தூர் பகுதியைச் சேர்ந்த பகவல்சிங் லைலா ஆகிய தம்பதி வீட்டில் கடைசியாக இருந்தது தெரியவந்தது.

பின்பு இருவரையும் விசாரணை செய்ததில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதில் பகவல்சிங்கிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த மந்திரவாதியான ஷாபி ஆகிய இருவருக்கும் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டது. குறுகிய காலத்திலேயே நெருக்கமான ஷாபி பகவல்சிங்கின் வீட்டில் ஒரு பெண்ணை நரபலி கொடுத்தால் செல்வம் பெருகும் உடல் வலிமை பெற்று ஆயுள் கூடும் என அவரிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கு பகவல்சிங் தம்பதியினர் சம்மதம் தெரிவித்துள்ளனர். அப்போதுதான் பத்மாவிடம் அணுகிய ஷாஃபி பண ஆசை காட்டி பகவல்சிங்கின் வீட்டிற்கு அழைத்துச் சென்று கட்டிலின் மீது படுக்க வைத்து கை,கால்களை கட்டிப்போட்டு கொடூரமாக கொலை செய்து, துண்டு துண்டாக வெட்டி நரபலி கொடுத்து ரத்தத்தை அரை முழுவதும் தெளித்து விடிய விடிய பூஜை நடத்தியுள்ளார்.

மேலும் ஒரு சில உடல் பாகங்களை சமைத்து சாப்பிட்டால் உடல் வலிமை பெருகும் என தெரிவித்ததன் பேரில், பகவல்சிங் தம்பதியினர் சமைத்து மனித மாமிசத்தை உணவாக உட்கொண்டு உடல் பாகங்களை வீட்டின் அருகே புதைத்துள்ளனர். மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அதில் பத்மா மட்டும் அல்லாமல் கொச்சி காலடி பகுதியைச் சேர்ந்த ரோஸ்லி என்ற பெண்ணும் நரபலி கொடுக்கப்பட்டுள்ளார் என தெரியவந்தது. மந்திரவாதியான ஷாபி, மருத்துவர் பகவல்சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகிய மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் பத்மாவின் உடல் பாகங்கள் அழுகிய நிலையில் இருப்பதாலும், டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாலும் சொந்த ஊருக்கு கொண்டு வர கால தாமதமானது. இறுதி கட்ட விசாரணை மற்றும் டிஎன்ஏ பரிசோதனைகளுக்கு பிறகு இரு மாதம் கழித்து பத்மாவின் உடல் பாகங்கள் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: கருத்தடை சிகிச்சை செய்துக்கொண்ட பெண் மரணம் - நீலகிரியில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.