பாட்டாளி மக்கள் கட்சி தனித்து போட்டியிடக் காரணம் என்ன?

author img

By

Published : Sep 15, 2021, 7:02 PM IST

பாட்டாளி மக்கள் கட்சி

தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களில் நடைபெறவிருக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில், பாமக தனித்து போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

தர்மபுரி: தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது.

தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு பாட்டாளி மக்கள் கட்சி உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே மணி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

பாமக தனித்துப் போட்டி

மேலும் இந்த அறிவிப்பில் விருப்ப மனு தாக்கல் 15ஆம் தேதியில் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. நாடாளுமன்றத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமக, உள்ளாட்சித் தேர்தலில் திடீரென தனித்துப் போட்டியிடும் என வெளியாகியுள்ள அறிவிப்பு, அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Also read: உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டி

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கணிசமான வாக்கு வங்கியை பாமக வைத்துள்ளதால், இந்த முடிவை பாமக எடுத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

வாக்கு வங்கியைக் குறிவைக்கும் பாமக

மேலும், தனித்து தேர்தலில் களம் கண்டால், கட்சியின் சார்பில் போட்டியிட வாய்ப்புகள் அதிக அளவு கிடைக்கும் ஆனால், கூட்டணியில் போட்டியிடும்போது குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே போட்டியிட முடியும் என்பதால் ஒன்பது மாவட்டங்களிலும் தனியாகப் போட்டியிட்டு, அதிக வேட்பாளர்களைக் களமிறக்கி வெற்றி காண பாமக் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

Also read: ’சேப்பாக்கம் சேகுவேரா...’ - உதயநிதியைத் தாக்கும் ஜெயக்குமார்!

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆறு மாவட்டங்களில் பாமக - அதிமுக கூட்டணி திமுகவிடம் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே தோல்வி அடைந்துள்ளது. இதன் காரணமாக தனியாகப் போட்டியிட்டால் கணிசமான இடங்களில் வெற்றி பெற முடியும் என்ற கணக்கில் பாட்டாளி மக்கள் கட்சி தேர்தலில் தனியாகக் களம் காண்கிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.