ETV Bharat / state

திடீரென வாக்களிக்க வந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் - இரவு 8:45 மணி வரை நடந்த வாக்குப்பதிவு

author img

By

Published : Oct 6, 2021, 9:16 PM IST

Updated : Oct 6, 2021, 10:13 PM IST

சிக்கனாங்குப்பம் என்னும் கிராமத்தில் இறுதி நேரத்தில் 500-க்கும் மேற்பட்டோர் திரண்டதால், இரவு 8:45 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

More than a hundred people suddenly came to vote and the voting that took place after 1930 Pm
More than a hundred people suddenly came to vote and the voting that took place after 1930 Pm

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட சிக்கனாங்குப்பம் கிராமத்தில் சுமார் 2500-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள நிலையில், அங்கு 3 வாக்குச்சாவடி மையங்கள் மட்டுமே அமைக்கப்பட்டிருந்தன.


காலை முதல் வாக்குப்பதிவு மந்தமாக காணப்பட்ட நிலையில், மாலை 4 மணிக்கு மேல் சுமார் 500க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் திரண்டு, நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிக்கத் தொடங்கினர்.

சிறிதுநேரம் சலசலப்பு

மேலும் 5 மணியளவில் வாக்குச்சாவடி மையத்தின் கேட்டை காவல் துறையினர் மூடியதால், காவல் துறைக்கும் வாக்காளர்களுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் வெளியில் காத்திருந்த வாக்காளர்களை வாக்களிக்க உள்ளே அனுமதித்தனர்.

டோக்கன்கள் விநியோகம்

இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு, அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குகளைச் செலுத்தினர்.

7:30 மணியைக் கடந்தும் நடைபெற்ற வாக்குப்பதிவு சரியாக இரவு 8:45 மணிக்கு நிறைவு பெற்றது.
மேலும் அடுத்த முறை தேர்தல் நடைபெறும்போது, அதாவது கூடுதலாக வாக்குச்சாவடி மையங்களை அமைத்து வாக்காளர்களின் சிரமத்தைப் போக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: தொழிலதிபர் கடத்தல் -சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த தலைமைக்காவலர்

Last Updated :Oct 6, 2021, 10:13 PM IST

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.