தருமபுரியில் களைகட்டிய 3ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி!

author img

By

Published : Jan 21, 2023, 12:57 PM IST

தருமபுரியில் களைகட்டிய 3ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி!

தருமபுரியில் பொங்கல் விழாவையொட்டி நடைபெற்ற 3ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

தருமபுரியில் பொங்கல் விழாவையொட்டி நடைபெற்ற 3ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்

தருமபுரி: பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. அந்த வகையில் தருமபுரி தடங்கம் கிராமத்தில் மண்டு மாரியம்மன் கோயில் விழா மற்றும் பொங்கல் விழாவை ஒட்டி, அதியமான் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி உறுதிமொழி வாசிக்க, அதனை மாடுபிடி வீரர்கள் ஏற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து இந்த போட்டியைத் தமிழ்நாடு உழவர் நலன் மற்றும் வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 700 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். தொடர்ந்து வாடிவாசல் வழியே சீரிப்பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு பிடித்தனர்.

இதில் வெற்றி பெறும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்குத் தங்க நாணயங்கள், குக்கர் மற்றும் அண்டா ஆகியவை பரிசாக வழங்கப்பட்டது. மேலும் முதலிடம் பெறும் காளை மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியைக் காண ஏராளமான இளைஞர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்துள்ளனர்.

மேலும் இந்த ஜல்லிக்கட்டு விழாவை ஒட்டி 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காயம் அடைந்த வீரர்களுக்குச் சிகிச்சை வழங்குவதற்கு அவசர ஊர்திகள், மருத்துவத் துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் தயார் நிலையில் உள்ளனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இனி மதுவை ஒழிக்க முடியாது - இயக்குனர் பேரரசு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.