மக்களின் தேவைகளை அறியாதவர் முதலமைச்சர் ஸ்டாலின் - கே.பி.அன்பழகன் விமர்சனம்

மக்களின் தேவைகளை அறியாதவர் முதலமைச்சர் ஸ்டாலின் - கே.பி.அன்பழகன் விமர்சனம்
மக்களின் தேவைகளை அறிந்து செயல்படுத்த தெரியாத முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருப்பதாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் விமர்சனம் செய்துள்ளார்.
தருமபுரி: குமாரசாமிப்பேட்டை வாரியார் திடலில், அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பளராக, பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் கலந்துக்கொண்டார்.
விழா மேடையில் பேசிய கே.பி.அன்பழகன், "திமுகவிற்கு மொழிப்போர் வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தத் தகுதியில்லை. திமுக அமைச்சர் தன் சொந்த கட்சியினரையே கல்லால் அடிக்கும் நிலை உள்ளது. பால் விலை மூன்று மடங்கு உயர்த்திய நிலையில் கொள்முதல் விலை உயர்த்தவில்லை. கூடிய விரைவில் பேருந்து கட்டணத்தையும் ஏற்ற போகிறார்கள்.
மக்களைப் பாதிக்கக்கூடிய வகையில் தான் அவர்களது செயல்கள் இருக்கும். மக்களின் தேவையறிந்து செயல்படக்கூடிய தலைவராக, மக்களுக்குத் தேவையான திட்டங்களைச் செயல்படுத்தத் திராணி இல்லாத முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார்” எனப் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், அதிமுக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.
இதையும் படிங்க: ஜெயலலிதா இருந்திருந்தால் எடப்பாடியை துப்பாக்கியால் சுட்டிருப்பார் - அமைச்சர் கீதா ஜீவன்
