கரோனாவால் உயிரிழந்த காவலர்: ரூ.22 லட்சம் நிதியுதவி வழங்கிய காவலர்கள்

author img

By

Published : Sep 26, 2021, 6:39 AM IST

ந

தர்மபுரி: கரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ.22 லட்சத்தை காவலர்கள் வழங்கினர்.

தர்மபுரி மாவட்டம் ஏ.பள்ளிப்பட்டி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தவர் விஜயகுமார். இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கரோனா நோய் தொற்று ஏற்பட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விஜயகுமாரின் குடும்பத்திற்காக, 2011ஆம் ஆண்டு காவல் பணியில் சேர்ந்த காவலர்கள் ஒன்றிணைந்து காக்கி உதவும் கரங்கள் சார்பாக 22 லட்சத்து 58 ஆயிரத்து 156 ரூபாய் நிதி திரட்டினர்.

இந்த நிதியை காவலர்கள் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைசெல்வனிடம் வழங்கி விஜயகுமாரின் மனைவி ஜீவாவிடம் ஒப்படைத்தனர்.

விஜயகுமாருக்கு ஹேமவர்ஷினி என்ற 2 வயது பெண் குழந்தையும் மித்ரன் என்ற ஆறு வயது மகனும் உள்ளார்.

இத்தொகையை இரண்டு குழந்தைகளின் பெயரில் ஒரு லட்சம் ரூபாய் 10 லட்சம் ரூபாய் வைப்புத் தொகையாகவும் அஞ்சலகத்தில் 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வைப்புத் தொகையும் வைத்து அதற்கான பத்திரங்களை குடும்பத்தினரிடம் வழங்கினார்.

இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி: முதல் டோஸ் செலுத்திக்கொண்ட காவலர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.