கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை டிஜிட்டல் முறையில் கணக்கிடும் பணி தீவிரம்

author img

By

Published : Oct 28, 2022, 7:08 AM IST

Etv Bharaகோயில்களுக்கு சொந்தமான நிலங்களை டிஜிட்டல் முறையில் கணக்கிடும் பணி தீவிரம்t

மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை டிஜிட்டல் முறையில் கணக்கிடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மயிலாடுதுறை : தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை டிஜிட்டல் முறையில் கணக்கிட்டு HR&CE என்ற பெயர் பொறிக்கப்பட்ட எல்லைக்கல் நடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 1350 கோயில்களுக்கு சொந்தமான 24,500 ஏக்கர் நிலங்களில் 14,578 ஏக்கர் நிலங்கள் வருமானம் ஈட்டா சொத்துக்களாக உள்ளது. இந்நிலையில் இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான நிலங்களை முறைப்படுத்தவும், வருமானம் ஈட்டாமல் உள்ள சொத்துக்களை முறைப்படுத்தி ஏலம் விடுவதற்காகவும் சாட்டிலைட் மூலம் இயங்கும் டிஜிட்டல் குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் முறையில் அளவீடு செய்து எல்லைக் கல் நடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குத்தாலத்தை அடுத்த பெருஞ்சேரி கிராமத்தில் வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை தனி வட்டாட்சியர் விஜயராகவன் தலைமையிலான குழுவினர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள அறநிலையத்துறை சொத்துக்கள் கணக்கெடுக்கப்பட்டு அதில் எல்லைக்கல் நடும் பணி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : சாணத்தை ஒருவர் மீது ஒருவர் வீசியெறியும் விநோத சாணியடி திருவிழா..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.