பண்ருட்டியில் சிறுமியை கர்ப்பமாக்கிய மெக்கானிக் போக்சோவில் கைது

பண்ருட்டியில் சிறுமியை கர்ப்பமாக்கிய மெக்கானிக் போக்சோவில் கைது
கடலூரில் 17வயது சிறுமியை கர்ப்பமாக்கிய மெக்கானிக்கை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
கடலூர்: பண்ருட்டி அடுத்த தட்டாம்பாளையத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் அவரை காதல் ஆசை கூறி ஏமாற்றி இருக்கிறார் அதே பகுதியை சேர்ந்த மெக்கானிக் ஒருவர்.
சிறுமி கர்ப்பம் ஆன நிலையில் , அவரது பெற்றோர் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் காவல் ஆய்வாளர் வள்ளி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு , மெக்கானிக் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் பெண் காவலருக்கு கத்தி குத்து... பகிரங்க வாக்குமூலம் கொடுத்த குற்றவாளி
