சிதம்பரம் அருகில் வீடுகளை சூழ்ந்த மழைநீர்; பொதுமக்கள் அவதி

சிதம்பரம் அருகில் வீடுகளை சூழ்ந்த மழைநீர்; பொதுமக்கள் அவதி
சிதம்பரத்தில் 500க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்துள்ள மழைநீர், போதிய வடிகால் வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
கடலூர்: சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் நேற்று அதிகாலை வரை பலத்த மழை பெய்தது. சிதம்பரத்தில் அதிகபட்சமாக 30 சென்டி மீட்டர் மழைப்பதிவாகியிருந்தது. இதனால் சிதம்பரம் நகரை ஒட்டி தாழ்வாக உள்ள குடியிருப்புப்பகுதிகளில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.
சிதம்பரத்தை அடுத்த சி.தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட சத்திய சாய்ராம் நகர், கண்ணன் நகர், அன்னம் நகர், மகாத்மா காந்திநகர், பத்மாவதி நகர், அம்பலவானம் நகர், ராகவேந்திரா நகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட குடியிருப்புப்பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதனால் 500-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்து இருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளை சூழ்ந்துள்ள மழை நீரால் வீட்டுக்குள் பாம்பு, பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் வந்துவிடுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மழை நீர் வெளியேறுவதற்கான போதிய வடிகால் வசதி இல்லாததால் மழை நீரை வெளியேற்ற முடியாமல் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். இந்நிலையில் இன்று மீண்டும் காலையில் இருந்து கன மழை பெய்து வருவதால் மீண்டும் பொதுமக்கள் அச்சத்துக்கு உள்ளாகி உள்ளனர்.
இதையும் படிங்க: Video: பசுவின் உயிரைக் காத்த தூய்மைப்பணியாளர்கள்
