ஊதியத்திற்கு மட்டும் மாவட்ட கல்வி அலுவலர்கள் வேலை செய்யக்கூடாது - அமைச்சர் அன்பில் மகேஷ்

author img

By

Published : Aug 12, 2022, 11:20 AM IST

மாவட்ட கல்வி அலுவலர்கள் ஊதியத்திற்கு மட்டும் வேலை செய்யக்கூடாது - அமைச்சர் அன்பில் மகேஷ்

ஊதியத்திற்கு மட்டும் மாவட்ட கல்வி அலுவலர்கள் வேலை செய்யக்கூடாது என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

கடலூர்: நெய்வேலியில் கடலூர்,விழுப்புரம்,கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களை சார்ந்த பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தொழிலாளர் நல துறை அமைச்சர் கணேசன், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன்,நெய்வேலி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் பேசி அமைச்சர் அன்பில் மகேஷ், தற்போது இருக்கும் சூழ்நிலையில் பள்ளி கல்வி துறைக்கு மக்கள் மற்றும் ஊடக்கத்திலும் பாராட்டும் மற்றும் விமர்சனங்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது.

மாவட்ட கல்வி அலுவலர்கள் ஊதியத்திற்கு மட்டும் வேலை செய்யக்கூடாது - அமைச்சர் அன்பில் மகேஷ்

அனைத்து மாவட்டத்திலும் உள்ள சிஇஓ, டிஇஓ ஆகியோர் தங்கள் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிக்கு நேரடியாக சென்று அடிக்கடி ஆய்வு நடத்த வேண்டும். ஆய்வின் போது பள்ளியின் வளர்ச்சிக்காக சிஇஓ தலைமை ஆசிரியர்களை கோபத்துடன் கேள்விகள் கேட்டால் அதனை தனிப்பட்ட பிரச்சனையாக கருதக் கூடாது.

கள்ளக்குறிச்சி சம்பவத்தால் பள்ளி கல்வித்துறைக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டால் 2 வாரத்துக்குள் புத்தகம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த 3 மாவட்டங்களிலும் பின்தங்கிய மாணவர்கள் அதிகம்வுள்ள மாவட்டம் கடலூர் மாவட்டம். அங்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் தான் பள்ளி சிறப்பாக செயல்படுவதாக பேசப்பட்டு வரும் நிலையை மாற்றி தமிழ்நாடு முதலமைச்சரின் நோக்கம் கடலூரில் பள்ளிகள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பது தான்.

மாவட்ட கல்வி அலுவலர்கள் ஊதியத்திற்காக வேலை செய்யாமல் தான் இருக்கும் துறையில் கல்வியில் ஒரு மாற்றத்தை உருவாகிவிட்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் செயல்பட வேண்டும். அப்போது ஓய்வு பெறும் காலத்தில் நிம்மதி கிடைக்கும்" என்றார்.

இதையும் படிங்க: நிலக்கரி எடுக்கப்பட்டதால் கடலூர் மாவட்டம் பாதிப்பு - மத்திய அமைச்சர் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.