புவனகிரியில் வீட்டிற்குள் புகுந்த முதலையால் பரபரப்பு

புவனகிரியில் வீட்டிற்குள் புகுந்த முதலையால் பரபரப்பு
கடலூர் மாவட்டம் தாதம்பேட்டை கிராமத்தில், வீட்டிற்குள் புகுந்த முதலையை வனத்துறை அதிகாரிகள் உதவியுடன் பொதுமக்கள் பிடித்து ஏரியில் விட்டனர்.
கடலூர்: புவனகிரி அருகேவுள்ள தாதம்பேட்டை கிராமத்தில் முதலை ஒன்று வீட்டுக்குள் புகுந்துள்ளது. வெள்ளாற்று கரையோரம் வந்த முதலை ஒரு வீட்டிற்கு உள்ளே நுழைந்தது.
பக்கத்து வீட்டு பெண் ஒருவர் முதலையை பார்த்து அலறியடித்து சத்தம் போட, அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது ஓட்டு வீட்டிற்குள் முதலை ஒன்று இருந்தது தெரியவந்தது. இதனையறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பின்னர், பொதுமக்களை முதலையிடம் நெருங்காதவாறு பார்த்துக் கொண்டவாறு வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி கிராம மக்கள் உதவியுடன் முதலையை பிடித்தனர்.
முதலையை சிதம்பரம் அருகே வக்கரமாரி ஏரியில் விடுவித்தனர். இரவு நேரத்தில் முதலை ஒன்று வீட்டுக்குள் நுழைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: 'RSS-ன் கைக்கூலி கே.எஸ்.அழகிரி' - சிதம்பரம் போஸ்டரால் காங்கிரஸில் சர்ச்சை!
