வீடியோ: கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞரை இழுத்து சென்ற முதலை

வீடியோ: கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞரை இழுத்து சென்ற முதலை
சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞரை முதலை இழுத்து சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர்: சிதம்பரம் அருகே வடக்கு வேலக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பக்கிரி. இவரது மகன் திருமலை (18) தனது நண்பர்களான விஷ்ணு, பழனிவேல் உடன் நேற்று (நவ. 26) பழைய கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றார். அங்கு குளித்து கொண்டிருக்கும்போது திடீரென திருமலையை முதலை இழுத்து சென்றது.
உடனே அவரது நண்பர்கள் கரைக்கு திரும்பினர். இது குறித்து சிதம்பரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் வந்த தீயணைப்புத் துறையினர், வனத்துறை அதிகாரிகள், சிதம்பரம் வட்டாட்சியர் ஹரிதாஸ் சிதம்பரம், உதவி காவல் கண்காணிப்பாளர் ரகுபதி ஆகியோர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ரயில் நிலையத்தில் மூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல் - இருவர் கைது
