‘பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் தகுந்த காப்பீட்டு தொகை வழங்கவில்லை’ - அன்புமணி ராமதாஸ்

author img

By

Published : Oct 31, 2022, 9:59 AM IST

Updated : Nov 1, 2022, 8:56 AM IST

Etv Bharat செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ்

விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் இதுவரை தகுந்த காப்பீட்டு தொகை வழங்கவில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

கீழப்பழுரில் இருந்து சோழர் பாசன திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வரை எழுச்சி நடைபயணம் மேற்கொண்டார்.
இந்த பயணம் நேற்று (அக்.30) கீழப்பழுவூரில் தொடங்கி கரைப்வெட்டி, கண்டராதித்தம், திருமானுர், மீன்சுருட்டி ,
கண்டமங்கலம் வழியாக காட்டுமன்னார்கோவிலில் வந்து முடிவடைந்தது. நடைபயணத்தில் கட்சி நிர்வாகிகள் , உறுப்பினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

பின்னர் நடைபெற்ற பொது கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், “தமிழ்நாடு அரசு சோழர் பாசன திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அரியலூர் மாவட்டம் முதல் கடலூர் மாவட்டம் வரை நடைபயணம் மேற்கொண்டு அனைத்து ஏரிகளையும் பார்வையிட்டு வந்துள்ளேன். கடந்த ஆட்சியில் சோழர்கள் உருவாக்கப்பட்ட பழமைவாய்ந்த மிக பெரிய ஏரிகள் பொன்னேரி, வீராணம் ஏரிகளை தூர் வார ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு மேல் செலவு செய்யபட்டும் இதுவரை எந்த பயனும் இல்லை.

செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ்

இதில் ஊழல் நடந்துள்ளது. இதுபோன்ற ஏரிகளை தூர் வாரி விவசாயிகளுக்கு பொதுமக்களுக்கும் பயன்பெற ஏற்பாடுகள் செய்ய பாமக கோரிக்கை வைக்கிறது. இதுபோல் இந்த பகுதி விவசாயிகளுக்கு
பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் இதுவரை தகுந்த காப்பீட்டு தொகை வழங்க வில்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.

சில விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகையாக வெறும் 1 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை அவர்களது வங்கி கணக்கில் ஏற்றப்பட்டது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த நிலைமை வர விட மாட்டோம். நெல் குவிண்டாலுக்கு தற்போது கிடைக்கும் விலையை விட 50 விழுக்காடு விலையை கொடுத்து விவசாயிகளின் துயரம் போக்குவோம்” என தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, “இந்த ஆட்சியில் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் இந்த பகுதி விவசாயிகளுக்கு 1 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை காப்பீடு வழங்கப்பட்டது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் பழமை வாய்ந்த வீராணம் ஏரியை தூர் வார ஒதுக்கப்பட்ட கோடிக்கணக்கான
பணத்தினை சென்ற ஆட்சியாளர்கள் பங்கு போட்டு கொண்டு இதுவரை வீராணம் ஏரி தூர் வாரப்படவில்லை.

இந்த ஆட்சியில் அன்றாட காட்சிகளான ஏழைகள் வயிற்றில் அடிக்கும் மின்சார கட்டணம், போக்குவரத்து கட்டணம், குடிநீர் கட்டணம், அனைத்தையும் ஏற்றி தற்போது வாகனத்தில் வேலைக்கு செல்பவர்கள் மீது புதிய அபராத தொகையை ஏற்றி மீண்டும் மீண்டும் எளிய நடுத்தர வர்க்கத்தின் மீது கட்டண கொள்ளை அடிக்கும் திமுக ஆட்சியை வன்மையாக கண்டிக்கிறேன்.

புதிய மோட்டார் வாகன திருத்த சட்டம் குறித்து கேள்விக்கு பதிலளித்த அன்புமணி ராமதாஸ், “முதலில் இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதன்பிறகு அபராதத்தை விதித்துக்கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவனுக்கு ராஜ உத்சவ விருது - கர்நாடக அரசு அறிவிப்பு

Last Updated :Nov 1, 2022, 8:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.