கோயம்புத்தூர் மேற்குதொடர்ச்சிமலைகளில் அமைந்துள்ள ஆணைக்கட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் இருக்கும் வனப் பகுதிகளை ஒட்டி ஏராளமான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர் இதில் வீரபாண்டி ஊராட்சிக்கு உட்பட்ட கண்டிவழி என்ற மலை கிராமத்தில் 15 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த கிராமத்தில் சாலை தண்ணீர் மற்றும் மின்சாரம் ஆகிய வசதிகள் இருந்தபோதும் வீடுகள் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டன இதனால் அந்த கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர் குறிப்பாக மழைக் காலங்களில் வீடுகளுக்குள் ஒழுகும் மழை நீர் பூச்சிகளின் தொந்தரவு என இரவு நேரங்களில் தூங்க முடியாமல் தவித்து வந்தனர் இந்தப் பழங்குடியின மக்களுக்கு நல்ல தரமான வீடுகள் கட்ட வேண்டும் என்பது கனவாக இருந்து வந்தது இந்த நிலையில் ஜோஸ்வா என்ற பழங்குடிகள் நல செயற்பாட்டாளர் அந்த கனவை நனவாக்கி உள்ளார் அரசின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்று முதற்கட்டமாக 5 வீடுகள் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டன ஆனால் அரசு அளித்த நிதி போதுமானதாக இல்லை என்பதால் பல தன்னார்வ அமைப்பினர்களிடம் ஜோஸ்வா நிதியுதவி கேட்டுள்ளார் அதுவும் போதாத நிலையில் தனது சொத்தை விற்று வந்த பணத்தை முழுவதுமாக வீடுகள் கட்ட வழங்கி உள்ளார் அது மட்டுமல்லாமல் அதே கிராமத்தில் தங்கி இருந்து வீடுகள் கட்ட அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளார் இதன் பயனாக 5 பழங்குடியின குடும்பங்களுக்கு கடந்த 2019ஆம் ஆண்டில் வீடுகள் கிடைத்தது இதனையடுத்து மற்ற பழங்குடியின குடும்பங்கள் தங்களுக்கும் வீடுகள் கட்டித் தர உதவ வேண்டும் என ஜோஸ்வாவிடம் வலியுறுத்தி உள்ளனர் இதன் பேரில் 2வது கட்டமாக 7 வீடுகள் கட்ட ஏற்பாடுகள் நடைபெற்று உள்ளன தமிழ்நாடு அரசு பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில் அந்த நிதியை உயர்த்தி தர மாவட்ட ஆட்சியரிடம் ஜோஸ்வா கோரிக்கை வைத்துள்ளார் இதனை ஏற்ற அப்போதைய மாவட்ட ஆட்சியர் ராசாமணி இந்த தொகையை 3 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார் இருப்பினும் அந்த நிதியும் போதுமானதாக இல்லை அதேநேரம் கரோனா பேரிடருக்கு பின்னர் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு காரணமாகவும் தன்னார்வலர்களின் நிதியுதவி கிடைக்காததாலும் சுமார் 15 மாதங்கள் வீடுகளின் கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன பின்னர் கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த சமீரன் தன்னார்வ அமைப்புகளின் நிதியுதவி கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார் இதனையடுத்து ‘புராபெல் என்ற நிறுவனம் ஒரு வீட்டிற்கு தலா 2 லட்சம் ரூபாய் வீதம் நிதியுதவி வழங்கி உள்ளது இதனால் மீண்டும் வேகமெடுத்த கட்டுமானப் பணிகள் தற்போது முழுமையாக முடிவுற்றுள்ளது இந்த நிலையில் பணிகள் முடிவுற்ற 6 வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று மே 24 நடைபெற்றது இதில் புராபெல் வித்யா செந்தில்குமார் ராக் நிறுவனத் தலைவர் பாலசுந்தரம் மருத்துவர் மகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு வீடுகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர் மேலும் இது குறித்து கண்டிவழி கிராமத்தைச் சேர்ந்த கடலான் என்பவர் கூறுகையில் “பல ஆண்டுகள் வீடுகள் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வந்தோம் தொகுப்பு வீடுகளில் மழைக் காலங்களில் மழை நீர் ஒழுகியதால் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தோம் ஜோஸ்வா மிகவும் கஷ்டப்பட்டு எங்கெங்கோ அலைந்து அரசு மற்றும் தனியார் உதவியுடன் வீடு கட்டி தந்துள்ளார் தற்போது கட்டப்பட்ட வீடு நன்றாக உள்ளது இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது இதற்கு காரணமான ஜோஸ்வாவிற்கு நாங்கள் நன்றிக் கடன்பட்டுள்ளோம் என தெரிவித்தார் இதையும் படிங்க சாமி கொடுத்தும் பூசாரிக்கு மனமில்லை வனத்துறையால் மலை கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கிறதா