ETV Bharat / state

மது வாங்க கள்ள நோட்டு - இளைஞர் கைது..

author img

By

Published : Dec 10, 2022, 5:28 PM IST

கோவையில் உள்ள டாஸ்மாக் கடையில் 500 ரூபாய் கள்ள நோட்டு கொடுத்து மது வாங்க முன்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மது வாங்க கள்ள நோட்டு
மது வாங்க கள்ள நோட்டு

கோயம்புத்தூர்: சுண்டக்காமத்தூர் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு இளைஞர் ஒருவர் சென்று, 500 ரூபாய் தாள் கொடுத்து மது பாட்டில்கள் வாங்கியுள்ளார். ரூபாய் நோட்டை பெற்றுக்கொண்ட மேற்பார்வையாளர், அதனை சரிபார்த்த போது அது கள்ள நோட்டு என்று தெரியவந்துள்ளது.

உடனடியாக டாஸ்மாக் ஊழியர்களின் உதவியுடன், இளைஞரை மடக்கிப் பிடித்த மேற்பார்வையாளர், அவரை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இது குறித்து இளைஞரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கோவைபுதூர் அறிவாளி நகரைச் சேர்ந்த ரமேஷ் என்பது தெரிய வந்தது.

மேலும் கள்ள நோட்டுகளை கீழே கிடந்து எடுத்து வந்ததாக காவல்துறையினரிடம் ரமேஷ் கூறியுள்ளார். ஆனால் ரமேஷ் மீது சந்தேகமடைந்த காவல்துறையினர், அவரிடம் மேற்கொண்ட கிடுக்கிப்பிடி விசாரணையில், 500 ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து ரமேஷிடமிருந்து 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 56 பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர், ரமேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: நிச்சயதார்த்த நாளில் Ex-காதலனால் கடத்தப்பட்ட பெண்; சினிமாவை மிஞ்சும் நிஜம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.