கோவையில் ராக்கெட் வேகத்தில் அதிகரிக்கும் கரோனா; மீண்டும் ஊரடங்கா?

author img

By

Published : Jan 15, 2022, 8:12 AM IST

ராக்கெட் வேகத்தில் அதிகரிக்கும் கரோனா, கோவையில் ஊரடங்கு

கோவையில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் அதிகரித்துவருவதால் மீண்டும் முழு ஊரடங்கு விதிக்கப்பட வாய்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோயம்புத்தூர்: நாடு முழுவதும் கரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு அரசு ஞாயிறு முழு ஊரடங்கு உள்ளிட்ட முக்கிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.

குறிப்பாக சென்னை, கோயம்புத்தூர் மாவட்டங்களில் மற்ற மாவட்டங்களைவிட தொற்று எண்ணிக்கை அதிகம் உறுதி செய்யப்படுவதால், அந்தந்த மாநகராட்சிகள் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டுள்ளன.

கோவையில் ராக்கெட் வேகத்தில் அதிகரிக்கும் கரோனா, covid hike in coimbatore

குழந்தை, பெரியோருக்கான உலகளாவிய தடுப்பூசி கோவாக்சின்!

இதனிடையே தமிழ்நாட்டில் நேற்று(ஜன.14) 23,459 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதன்படி இதுவரை பாதித்தோர் எண்ணிக்கை 28,91,959 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 27,36,986ஆகவும் உள்ளது

இந்த நிலையில் கடந்த சில நாள்களாக கோவையில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கோவையில் மட்டும் இதுவரை மொத்தம் 2,61149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் (ஜனவரி 13ஆம் தேதி) ஒரே நாளில் 1162 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1564 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவையில் ராக்கெட் வேகத்தில் அதிகரிக்கும் கரோனா, covid hike in coimbatore

கோவையில் கரோனா தொற்றுக்கு பொங்கலோ பொங்கல்

கோவையில் கரோனா பாதிப்பு ராக்கெட் வேகத்தில் உருவெடுக்கும் நிலையில் மீண்டும் முழு ஊரடங்கு வருமோ என்ற எண்ணமே மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தடுக்க தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என அரசு அலுவலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த வண்ணம் உள்ளனர்.

கோவையில் ராக்கெட் வேகத்தில் அதிகரிக்கும் கரோனா, covid hike in coimbatore

இதனிடையே, இந்தியாவில் நேற்று ஒரே நாளில் இரண்டு லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12 லட்சத்து 72 ஆயிரத்து 73 ஆக அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஒமைக்ரான் தொற்றால் 5,753 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் இதுவரை 155.39 கோடி மக்கள் கரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 73 லட்சத்து 08 ஆயிரத்து 669 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து, முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் இணை நோய் உள்ளவர்களுக்கான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சேவையை முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை பட்டினபாக்கத்தில் (ஜன. 10) தொடங்கி வைத்தார்.

கோவையில் ராக்கெட் வேகத்தில் அதிகரிக்கும் கரோனா, covid hike in coimbatore

தமிழ்நாட்டில் 35.46 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள் உள்ளனர். 9.78 லட்சம் முன்களப் பணியாளர்கள், 5.65 லட்சம் சுகாதார பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் உள்ள 20.3லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்கள்.

இதையும் படிங்க: மு.க. ஸ்டாலின் தொகுதியில் கரோனா பரவல் அதிகரிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.