'மாணவர்களை மையப்படுத்துங்க; பாலியல் பிரச்சினைகள் குறையும்'

author img

By

Published : Dec 16, 2021, 8:28 AM IST

பள்ளிகளில் பாலியல் குற்றச்சாட்டிற்கு காரணம் என்ன

பள்ளிகள் மாணவர்களை மையப்படுத்தியதாக அமைய வேண்டும். கட்டடங்களையும், ஆசிரியர்களையும் மையப்படுத்தியதாக அமையக் கூடாது. பள்ளிகள் எப்போது மாணவர்களை மையப்படுத்தியதாக அமைகிறதோ அப்போதுதான் பாலியல் பிரச்சினைகள் குறையும்.

சென்னை: தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் சார்பில் தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கையைச் செயல்படுத்துவது குறித்த மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.

மாநில சட்ட ஆணைய உறுப்பினரும், உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியுமான விமலா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில், சமூக பாதுகாப்புத் துறை இயக்குநர் வளர்மதி கலந்துகொண்டு மாநில குழந்தைகளுக்கான கொள்கை 2021 செயல்படுத்துவதற்கான செயல்திட்டங்களை வரவேற்பதாகத் தெரிவித்தார்.

மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம்
மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம்

குழந்தை செயல்பாட்டாளர்கள் ஒருங்கிணைந்து

தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் அமைப்பாளர் ஆண்ட்ரூஸ் சேசுராஜ் கூறும்பொழுது, "தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை 2021 நவம்பர் 20ஆம் தேதி வெளியிட்டிருந்தது. அந்தக் கொள்கையின் அடிப்படையில் செயல்திட்டம் வகுப்பது குறித்து குழந்தை செயல்பாட்டாளர்கள் ஒருங்கிணைந்து இரண்டு நாள் கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளோம்.

மேலும், இந்தக் கருத்தரங்கில் கொள்கையில் தேவையான மாற்றங்கள் குறித்தும் ஆலோசிக்க உள்ளோம். இந்தக் கொள்கையைச் செயல்படுத்தும்போது செய்ய வேண்டிய செயல் திட்டங்களைத் தீர்மானமாக நிறைவேற்றி, அந்தந்தத் துறைகளிடம் அளிப்போம்.

தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கையில் பரந்துபட்ட வகையில் எல்லா விஷயங்களையும் உள்ளடக்கி இருக்கின்றனர். ஆனால், பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு விரைவு நீதி வழங்குவது போன்ற விஷயங்கள் குறைவாக இருப்பதாகக் கருதுகிறோம்.

பள்ளிகளில் பாலியல் குற்றச்சாட்டிற்கு காரணம் என்ன?

ஐநா குழந்தை உரிமைகள் உடன்படிக்கை

மேலும், 13 முதல் 18 வயதிற்குள்பட்ட குழந்தைகளில் ஆண், பெண் பாலின பாகுபாடு குறைவாக இருப்பதாகக் கருதுகிறோம். அதேபோல், சிறையிலுள்ள பெற்றோர்களின் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறைவாக இருப்பதாகக் கருதுகிறோம். மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்தும் குறைவாக இருப்பதாகக் கருதுகிறோம். கொள்கை அளவில் ஒரு பரந்துபட்ட அளவில்தான் தகவல்கள் இருக்கும்.

பள்ளிகளில் பாலியல் குற்றச்சாட்டிற்கு காரணம் என்ன
பள்ளிகளில் பாலியல் குற்றச்சாட்டிற்கு காரணம் என்ன

அதனைச் செயல்படுத்தும்பொழுதுதான் முழுமையான செயல்பாடு தெரியவரும். தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கையில் பள்ளியில் பாலியல் பாதுகாப்பு குறித்துக் கூறப்பட்டுள்ளது. ஆனால், அதனை நடைமுறைப்படுத்துவது குறித்து சற்று குறைவாக உள்ளது.

தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை செயல்திட்டமாகச் செயல்படுத்துவது குறித்தும் நாங்கள் தொடர்ந்து கண்காணித்துவருவோம். ஐநா குழந்தை உரிமைகள் மீதான உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ள சரத்துகளைத் தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கையில் அளித்துள்ளனர். இதனையே, ஒரு சிறந்த மாதிரியாகத்தான் கருதுகிறோம்.

அதிகாரம் இருக்கக்கூடிய இடங்களில் அத்துமீறல்கள்

பள்ளிகளில் பாலியல் குற்றம் குறித்த செயல்கள் தற்போது அதிக அளவில் வெளியில் வருவதைப் பார்க்கிறோம். காரணம் எங்கெல்லாம் அதிகாரம் இருக்கக்கூடிய உறவுகள் இருக்கும் இடங்களில் அத்துமீறல்கள் நடைபெறுவதை நாம் வரலாற்று ரீதியாகப் பார்க்க முடியும்.

ஆசிரியர்களிடம் மதிப்பெண் வழங்கும் அதிகாரம் இருக்கிறது. மாணவர்கள் அதனைப் பெறும் நிலையில் இருக்கின்றனர். எனவே, அந்த நிலை முதலில் மாற வேண்டும்.

பள்ளிகளில் பாலியல் குற்றச்சாட்டிற்கு காரணம் என்ன
பள்ளிகளில் பாலியல் குற்றச்சாட்டிற்கு காரணம் என்ன

பள்ளிகள் மாணவர்களை மையப்படுத்தியதாக அமைய வேண்டும். கட்டடங்களையும் ஆசிரியர்களையும் மையப்படுத்தியதாக அமையக் கூடாது. பள்ளிகள் எப்போது மாணவர்களை மையப்படுத்தியதாக அமைகிறதோ அப்போது இதற்குரிய பிரச்சினைகள் குறையும்.

மாணவர்களைப் பங்கேற்கச் செய்தல்

பள்ளிகளில் மாணவர்கள் பேசுவதற்கான வாய்ப்புகளையும், தளங்களையும் அமைத்துத் தர வேண்டும். அப்பொழுது, இதுபோன்ற பிரச்சினைகள் குறையும். பள்ளிகளில் மாணவர் மன்றம் அமைத்தல், புகார் பெட்டி வைத்தல், மாணவர்கள் பாதுகாப்புக் குழுவில் அவர்களைப் பங்கேற்கச் செய்தல் போன்ற அமைப்புகளை உருவாக்கினால் பாலியல் குற்றங்கள் குறையும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பள்ளிகளில் பாலியல் புகார் அளிப்பதற்கான புகார் பெட்டி வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.