டிரெண்டிங்: ரூ.500க்கு - வாங்கக் கூடிய பொருட்கள் என்னென்ன ?

author img

By

Published : May 15, 2022, 7:58 AM IST

500 ரூபாய்

நம்மிடம் கையில் 500 ரூபாய் இருந்தால் , அதில் என்னென்ன பொருட்கள் வாங்க முடியும் என்ற பட்டியலை தற்போது பார்க்கலாம்..

கர்நாடக பொன்னி அரிசி கிலோ 48 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை அரசி மண்டிகளில் விற்பனை செய்யப்படுகிறது. 500 ரூபாய்க்கு 10 கிலோ அரிசி பேக் வாங்கலாம்; தமிழ்நாட்டில் இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரப்படி 500 ரூபாய்க்கு வாகனங்களில் 4.5 லிட்டர் பெட்ரோலும் , 5 லிட்டர் டீசலும் நிரப்பலாம்.

வாகனத்திற்கு 4.50 லிட்டர் பெட்ரோல் நிரப்பலாம்
வாகனத்திற்கு 4.50 லிட்டர் பெட்ரோல் நிரப்பலாம்

சமையலுக்கு மிகுந்த அத்தியாவசியமான காய்கறி என்றால் அது தக்காளி தான். கோயம்பேடு மார்க்கெட் நிலவரப்படி ஒரு கிலோ 82 ரூபாய் முதல் 85 ரூபாய்க்கு விற்கப்படுவதால் 500 ரூபாய்க்கு 6 கிலோ தக்காளி அல்லது 20 கிலோ வெங்காயம் வாங்க முடியும்

6 கிலோ தக்காளி வாங்கலாம்
6 கிலோ தக்காளி வாங்கலாம்

நீங்கள் அசைவப் பிரியராக இருந்தால் 2.5 கிலோ கறிக்கோழி வாங்கி சமைக்கலாம்.

சுமார் 2.5 கிலோ கோழி இறைச்சி வாங்கலாம்
சுமார் 2.5 கிலோ கோழி இறைச்சி வாங்கலாம்

கேட்ஜெட் பிரியாக இருந்தால் போட் ஹெட்செட் வாங்கலாம் அல்லது 499 ரூபாய்க்கு ஜியோ ரிசார்ஜ் செய்து ஒரு மாதத்திற்கு தினமும் 2 ஜிபி டேட்டா , அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் ஹாட்ஸ்டார் சேவையை பெறலாம்.

ஜியோவில் 499 பிளான் ரிசார்ஜ்
ஜியோவில் 499 பிளான் ரீசார்ஜ்

500 ரூபாய்க்கு சென்னை டூ ஐதராபாத் ரயில் பயணம் செய்யலாம். ஆன்லைனின் டிக்கெட் புக்கிங் செய்தால் 500 ரூபாயில் 16 ரூபாய் மிச்சம் ஆகும். 500 ரூபாயை மிச்சம் செய்ய விரும்பினால் இந்தியா போஸ்ட் பேங்கில் சேமிப்பு கணக்கை தொடங்கலாம்...

மேலும் தமிழ்நாட்டில் பொது இடங்களில் முக கவசம் அணிய தவறினால் 500 ரூபாய் அபராதம் செலுத்த நேரிடும் என்பதையும் மறக்காதீர்கள்..

இதையும் படிங்க: மாஸ்க் அணியாவிட்டால் ரூ500 அபராதம்!- மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.