கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து குறைவு.. காய்கறி விலைகளில் மாற்றம்!

author img

By

Published : May 14, 2022, 2:09 PM IST

vegetable-prices-rising-due-to-shortage-of-supply-in-koyambedu-market கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் விலை கிடுகிடுவென உயர்ந்த காய்கறிகளின் விலை - காரணம் இது தானாம் மக்களே...

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் பீன்ஸ், தக்காளி, கேரட், கத்திரி, கோஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மார்கெட்டிற்கு காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் இன்று (மே 14) விலை உயர்ந்துள்ளது. இதனையடுத்து, விலை உயர்வால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து வழக்கத்தைவிட காய்கறிகளின் வரத்துக் குறைவு என்பதால் விலை உயர்ந்துள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மழை பெய்ததால் வரத்து குறைந்துள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய விலை
கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய விலை

நேற்று முன்தினம் (மே 12) ஒரு கிலோ ரூ.60 விற்ற பெங்களூரு தக்காளி இன்று ரூ.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ.50இல் இருந்து ரூ.70ஆக உயர்ந்துள்ளது.

ஒரு கிலோ கேரட் ரூ.25இல் இருந்து ரூ.35க்கும், பீன்ஸ் ரூ.80இல் இருந்து ரூ.90க்கும், கத்தரிக்காய் ரூ.25இல் இருந்து ரூ.35க்கும், குடை மிளகாய் ரூ.30இல் இருந்து ரூ.40க்கும் விற்பனை செய்யப்பட்டது.

கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய விலை
கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய விலை

கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய விலை நிலவரம்

நாட்டு காய்கறிகள்விலை(கிலோ / ரூபாய் மதிப்பில்)
அவரைக்காய் ரூ.60
கத்திரிக்காய் ரூ.35
கருணைக்கிழங்கு ரூ.30
கொத்தவரை ரூ.169
முருங்கைக்காய் ரூ.50
கோவக்காய் ரூ.15
வெண்டைக்காய் ரூ.40
பாவற்காய் ரூ.35
இஞ்சி ரூ.35
பச்சை மிளகாய் ரூ.17
மாங்காய் ரூ.25
தக்காளி ரூ.70
வாழைப்பூ ரூ.30
வாழை தண்டுரூ.07
சேனைகிழங்கு ரூ.25
சேப்பங்கிழங்கு ரூ.48
புடலங்காய் ரூ.30
சுரைக்காய் ரூ.20
பெரிய வெங்காயம்ரூ.14
சாம்பார் வெங்காயம் ரூ.30
பெரிய தேங்காய்ரூ.28
சின்ன தேங்காய் ரூ.25
பெரிய பூண்டு ரூ.160
சின்ன பூண்டு ரூ.150
பூசணி ரூ.26
வெள்ளரி ரூ.10
மரவள்ளி ரூ.67
மக்காச்சோளம் ரூ.85
நெல்லிக்காய் ரூ.50
பீன்ஸ்ரூ.90
கேரட் ரூ.35
பீட்ரூட் ரூ.38
முட்டைகோஸ் ரூ.12
உருளைக்கிழங்கு ரூ.25
பச்சை பட்டாணி ரூ.90
பீர்க்கங்காய் ரூ.89
நூக்கல் ரூ.20
முள்ளங்கி ரூ.25
காலிபிளவர் ரூ.30
பெங்களூரு தக்காளிரூ.70
குடைமிளகாய் ரூ.40

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.