ETV Bharat / state

தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் இல்லை - மத்திய அரசு திட்டவட்டம்

author img

By

Published : Aug 3, 2021, 12:56 PM IST

Updated : Aug 3, 2021, 1:37 PM IST

தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் இல்லை என திட்டவட்டம்
தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் இல்லை என திட்டவட்டம்

12:51 August 03

தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல். முருகன் ஒன்றிய மீன்வளம், பால்வளம், கால்நடை துறை மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சராக அணமையில் பதவி ஏற்றார்.

அவரது சுயவிவரக் (BIO DATA) குறிப்பில் அவரது இருப்பிடம் கொங்குநாடு, தமிழ்நாடு என குறிப்பிடப்பட்டிருந்தது. நாமக்கல் மாவட்டம், பரமத்தி ஒன்றியத்திற்கு உள்பட்ட கோனூர் பகுதியைச் சேர்ந்த எல். முருகன், தனது சுயவிவரக் குறிப்பில் கொங்குநாடு என்று குறிப்பிட்டிருந்தது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. 

இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தனியார் அமைப்புகள்   கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், சில ஆதரவு குரல்களும் எழுந்தன.  

இந்நிலையில் தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் எதுவும் இல்லை என ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் மக்களவையில் பதில் அளித்துள்ளார்.  இதுதொடர்பாக பெரம்பலூர் எம்பி பாரிவேந்தர், மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம் கேள்வி எழுப்பி இருந்தனர். 

இதற்கு எழுத்துபூர்வமாக நிதியானந்த் ராய் அளித்துள்ள பதிலில், இதுதொடர்பாக எந்த கோரிக்கையும் பரிசீலனையில்  இல்லை என  விளக்கம் அளித்துள்ளார். 

இதையும் படிங்க : கிரீமிலேயர் வரம்பில் வேளாண் வருமானத்திற்கு விலக்கு - ராமதாஸ்

Last Updated : Aug 3, 2021, 1:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.