"ராசா போன்றவர்களை பேசவிட்டு ஸ்டாலின் வேடிக்கை பார்க்கிறாரோ?" - டிடிவி தினகரன் கண்டனம்

author img

By

Published : Sep 17, 2022, 1:15 PM IST

பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நாவடக்கம் தேவை - ஆ.ராசா கருத்துக்கு டிடிவி தினகரன் கண்டனம்

இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களை இழிவுபடுத்தும் விதமாக தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா மிகவும் கீழ்த்தரமாக பேசியிருப்பது கண்டனத்திற்குரியது என அமமக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை: அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் திமுக துணை பொதுச்செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா இந்து மதத்தை பின்பற்றுபவர்கள் மீது சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.

இதற்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், "இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களை இழிவுபடுத்தும் விதமாக தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா மிகவும் கீழ்த்தரமாக பேசியிருப்பது கண்டனத்திற்குரியது.

  • இந்துமதத்தைப் பின்பற்றுபவர்களை இழிவுபடுத்தும் விதமாக தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் திரு.ஆ.ராசா மிகவும் கீழ்த்தரமாக பேசியிருப்பது கண்டனத்திற்குரியது.

    மத உணர்வுகளைத் தூண்டும் இத்தகைய பேச்சுகளை அனுமதிப்பது சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும். (1/2)@CMOTamilnadu @mkstalin

    — TTV Dhinakaran (@TTVDhinakaran) September 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மத உணர்வுகளைத் தூண்டும் இத்தகைய பேச்சுகளை அனுமதிப்பது சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும். பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நாவடக்கம் தேவை. தி.மு.க அரசின் தோல்விகளைத் திசை திருப்புவதற்காகவே ராசா போன்றவர்களை பேசவிட்டு, முதலமைச்சர் ஸ்டாலின் வேடிக்கை பார்க்கிறாரோ? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: இந்துவாக இருக்கும் வரை சூத்திரன் தான்.. ஆ.ராசா பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.