ETV Bharat / state

குரூப் 4 தேர்வுக்கு இதுவரை 7 லட்சம் பேர் விண்ணப்பம்

author img

By

Published : Apr 17, 2022, 10:26 PM IST

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குருப் 4 போட்டித் தேர்விற்கு இன்று மாலை 5 மணி வரையில் 7 லட்சத்து 8 ஆயிரத்து 500 பேர் விண்ணபித்துள்ளனர்.

குருப் 4  டிஎன்பிஎஸ்சி குருப் 4
டிஎன்பிஎஸ்சி குருப் 4

சென்னை: டிஎன்பிஎஸ் குரூப் 4 தேர்வுக்கு மார்ச் 30ஆம் தேதி முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதில், மொத்தம் 7 ஆயிரத்து 301 காலிப்பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. இந்த நிலையில், குரூப் 4 தேர்வுக்கு இதுவரை 7 லட்சம் பேர் விண்ணப்பத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டிஎன்பிஎஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குரூப் 4 தேர்வுக்கு இன்று (ஏப் 17) மாலை 5 மணி வரையில், 7 லட்சத்து 8 ஆயிரத்து 500 பேர் விண்ணப்பித்துள்ளனர். குரூப் 4 எழுத்துத் தேர்வு ஜூலை மாதம் 24ஆம் தேதி காலையில் 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையில் நடைபெறுகிறது. விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் www.tnpsc.gov.in / www.tnpscexams.in ஆகிய இணைய தளங்களுக்குச் சென்று விண்ணப்பித்து கொள்ளலாம். வரும் 28ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 21 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஜேஇஇ நுழைவுத் தேர்வு பயிற்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.