'மக்கள் வரிப்பணத்தில் கருணாநிதிக்கு நினைவுச்சின்னம் வைப்பது தேவையில்லாத ஒன்று' - டிடிவி தினகரன்

author img

By

Published : Aug 5, 2022, 5:05 PM IST

மக்கள் வரிப்பணத்தில் கருணாநிதிக்கு நினைவுச்சின்னம் வைப்பது தேவையில்லாத ஒன்று - டிடிவி தினகரன்

'மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மக்கள் வரிப்பணத்தில் நினைவுச்சின்னம் வைப்பது தேவையில்லாத ஒன்று' என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச்சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கரோனா காலகட்டம் என்பதால் கடந்த முறை பொதுக்குழுக்கூட்டம் வீடியோ கான்ஃபெரன்ஸ் மூலமாக நடைபெற்றது. இந்தமுறை ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற இருக்கிறது. எல்லோருக்கும் மத்தியமாக இருக்கும் என்பதால் திருச்சியில் பொதுக்குழுவை நடத்தலாம் என திட்டமிட்டு இருந்தோம். ஆனால் அம்மாவின் நினைவாக இந்த முறை ஸ்ரீ வாருவில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

மத்திய அரசாக இருந்தாலும் சரி... மாநில அரசாக இருந்தாலும் சரி... பொதுவாக ஜிஎஸ்டி என்பது ஏழை எளிய மக்களைப் பாதிக்கிறது. மக்களால் ஏற்றுக்கொள்கின்ற அளவிற்கு வரியைக்குறைக்க வேண்டும் என வேண்டுகோள்விடுக்கிறேன். ஜிஎஸ்டி என்பது தனி அமைப்பாக செயல்படுகிறது என மத்திய அமைச்சர் சொல்லியிருக்கிறார். ஆனால் 33 விழுக்காடு மத்திய அரசுதான் பிரதானமாக இருக்கிறது. தமிழ்நாடு அதிகப்படியாக வரி செலுத்துகிறது.

ஒரு சில மாநிலங்கள், மத்திய அரசு கொடுக்கின்ற தொகையை வைத்து மாநிலங்களை நடத்துகிறது. அதனால் இதில் தமிழ்நாடு மட்டும் தனித்து முடிவெடுக்க முடியாது என நினைக்கிறேன். பெட்ரோல், டீசல் விலையை மத்திய, மாநில அரசுகள் இணைந்துகூட்டு முயற்சியாக கட்டுப்படுத்த வேண்டும். அதனைக்குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் கோரிக்கை ஆகும்.

தமிழ்நாட்டிற்குப் பாரதப்பிரதமர் நிகழ்ச்சிக்காக வரும்போது அவரைப் பாராட்டிப்பேசுவதை நான் வரவேற்கிறேன். கடந்த முறை அரசு நிகழ்ச்சிக்காக வந்தபோது திராவிட மாடல் என முதலமைச்சர் குறிப்பிட்டுப்பேசியது ஏற்புடையதாக இல்லை. இந்தமுறை அவர் பேசியது ஏற்புடையதாக இருந்தது. கனல் கண்ணன் விவகாரத்தில் பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையை தவிர, மற்ற அனைத்தையும் ஏற்றுக்கொள்கிறோம். கடவுள் மறுப்புக்கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. அதைத் தவிர அவரது சமூக நீதியால் தான் தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்கிறது என்பது உண்மை.

'பெரியார் கடவுளுக்கு எதிரியாக இல்லை': என்னைப் பொறுத்தவரை பெரியார் கூட ஸ்ரீரங்கநாதரை வழிபடுகிறார் என்றுதான் நான் எடுத்துக்கொள்கிறேன். ஏனெனில் பெரியார் கடவுளுக்கு எதிரியாக இல்லை; கடவுள் பெயரை பயன்படுத்தியவர்களுக்குத் தான் எதிரியாக இருந்துள்ளார். பெரியார் மீது எங்களுக்கு மரியாதை உண்டு அதே நேரத்தில் தெய்வங்களை போற்றுகின்ற வழி வந்தவர்கள் நாங்கள். கனல் கண்ணன் பெரியார் குறித்து பேசிவிட்டு ஏன் ஒளிந்து கொண்டார். தைரியமாக எதிர்கொள்ள வேண்டியது தானே, கனல் கண்ணன் இப்படி பேசத்தேவையில்லை, பேசிவிட்டு ஓடி ஒளியத்தேவையில்லை.

கலைஞர் கருணாநிதி எழுத்தாளர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், தமிழ்நாடு நிதி நெருக்கடியில் இருக்கும் பொழுது செலவு செய்து பேனா வைப்பது தேவையற்ற ஒன்று. அதிக நிதியை வைத்திருக்கக்கூடிய திமுக கட்சி நிதியில் இருந்து அதனை செய்யலாம்.

ஓ.பன்னீர்செல்வத்திடம் சமுதாய ரீதியாக ஒன்றுபட வேண்டும் எனக் கூறுவது ஏற்புடையதல்ல. ஒரு சமுதாயத்தில் பிறந்தேன் என்பதற்காக மற்ற சமுதாயத்தை மதிக்க வேண்டும்; என் சமுதாயத்தின் மீது அன்பாக இருக்கவேண்டும். பழனிசாமி மீது ஏற்பட்ட வெறுப்பால் சமுதாயத்தின் தலைவர்கள் அவ்வாறு எழுதி இருக்கலாம்" எனக்கூறினார்.

இதையும் படிங்க: ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஒன்றிணைய சாத்தியமா..?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.