100 நாள்களை நிறைவுசெய்யும் ஸ்டாலின் அரசு

author img

By

Published : Aug 14, 2021, 7:40 AM IST

Updated : Aug 14, 2021, 8:10 AM IST

ஸ்டாலின் அரசு

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு 100 நாள்களை இன்றுடன் (ஆகஸ்ட் 14) நிறைவுசெய்கிறது.

சென்னை: சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று மே 7ஆம் தேதியன்று முதன்முறையாக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சியமைத்தது.

கரோனா தடுப்பு நடவடிக்கையில் தொடங்கி காகிதமில்லா வரவு-செலவுத் திட்ட அறிக்கை (இ-பட்ஜெட்) என்ற புதிய பாய்ச்சலை நிகழ்த்தியது வரை திமுக அரசு தனது நூறு நாள்களை நிறைவுசெய்கிறது. மேலும், இன்று மேலும் ஒரு மைல்கல்லாக வேளாண்மைக்கென தனி வரவு-செலவுத் திட்ட அறிக்கையைத் தாக்கல்செய்கிறது.

இந்த நூறு நாள்களில் ஸ்டாலின் தலைமையிலான அரசு நிறைவேற்றிய மக்கள் நலத் திட்டங்கள்:

  • கரோனா கால நிவாரண நிதியாக அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூ.4000,
  • மகளிருக்கு அரசு நகரப் பேருந்தில் இலவசப் பயணச் சலுகை,
  • பால் விலைக் குறைப்பு,
  • உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது துரித நடவடிக்கை,
  • தேசிய வேலை உறுதித் திட்டத்தில் நூறு நாள் பணியை 150 நாள்களாக உயர்த்தி அறிவிப்பு,
  • 32 ஆயிரத்து 283 நபர்களுக்குப் பட்டா,
  • 30 ஆயிரத்து 455 பேருக்கு உதவித்தொகை,
  • மக்களை தேடி மருத்துவம்,
  • காகிதமில்லா வரவு-செலவுத் திட்ட அறிக்கை,
  • வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை (ஆகஸ்ட் 14)

இதையும் படிங்க: தமிழக பட்ஜெட் 2021

Last Updated :Aug 14, 2021, 8:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.