வீராங்கனை பிரியா மரண வழக்கு.. மருத்துவர்களுக்கான கேள்விகளை தயார் செய்த நீதிபதிகள்!

author img

By

Published : Nov 30, 2022, 9:16 PM IST

Etv Bharat

கால்பந்தாட்ட மாணவி பிரியா உயிரிழந்த வழக்கு குறித்து வருகிற டிசம்பர் 6ஆம் தேதி மருத்துவர்களிடம் விசாரணை நடத்தப்படவுள்ள நிலையில் அதற்கான கேள்விகளை நீதிபதிகள் தயார் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: கல்லூரி மாணவியும், கால்பந்தாட்ட வீராங்கனையுமான பிரியாவுக்கு பெரியார் நகர் அரசு மருத்துவமனை எலும்பு முறிவு துறை மருத்துவர்கள், வலது கால் முட்டியில் மேற்கொண்ட தவறான அறுவை சிகிச்சையில், ரத்த நாளம் பாதிக்கப்பட்ட நிலையில், பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக் குழு மருத்துவர்களான சிங்கார வடிவேலன் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் நடத்திய ஆய்வில், அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களின் கவனக்குறைவினால் தான் மாணவி உயிரிழந்தார் என மருத்துவ கல்வி இயக்குநருக்கு அறிக்கை தாக்கல் செய்ததின் படி, பெரியார் நகர் புறநகர் மருத்துவமனை எலும்பு முறிவு துறை மருத்துவர்கள், பால்ராம் சங்கர் மற்றும் சோமசுந்தர் ஆகியோரை மருத்துவ கல்வி இயக்குநரகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில் பெரவள்ளூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இயற்கைக்கு மாறான மரணம் என்கிற சட்டப்பிரிவு மாற்றி அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் என்ற அடிப்படையில் பெரவள்ளூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இரண்டு மருத்துவர்களை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பி இருந்தனர்.

இரண்டு மருத்துவர்களிடம் என்ன மாதிரியான கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என்பதனை தயார் செய்ததற்கு இரண்டு மருத்துவ நிபுணர்கள் கொளத்தூர் துணை ஆணையர் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகிய நான்கு பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டு, கேள்விகள் தயார் செய்யப்பட்டுள்ளன.

தயார் செய்யப்பட்ட கேள்விகளின் அடிப்படையில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் பால்ராம் சங்கர் மற்றும் சோமசுந்தர் ஆகியோரிடம், வருகிற 6ஆம் தேதி விசாரணை நடத்த உள்ளனர். மருத்துவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, ரகசிய விசாரணை நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: அஜித் - விஜய் ரசிகர்கள் நூதன புகார்.. சென்னை போலீஸ் பதில் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.