தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு - 36 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன!

author img

By

Published : May 14, 2022, 7:06 PM IST

தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு - 36 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன

தமிழ்நாட்டில் கலை, மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு 14ஆம் தேதி முதல் நடைபெற உள்ள நிலையில் பொது நுழைவுத் தேர்வு எழுத 36 ஆயிரத்து 710 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

சென்னை, தமிழ்நாட்டில் பொது நுழைவுத் தேர்வுக்கான (டான்செட் 2022) விண்ணப்பங்கள் மார்ச் 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 18 ஆம் தேதி வரையில் பெறப்பட்டன. எம்.பி.ஏ படிப்பிற்கு 21,557 பேரும், எம்.சி.ஏ படிப்பிற்கு 8,391 பேரும், எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் படிப்பிற்கு 6,762 பேரும் என 36 ஆயிரத்து 710 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

இவர்களுக்கு தேர்வுக்கான நுழைவுச்சீட்டு மே2 ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. எம்.சி.ஏ படிப்பிற்கு மே14 ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரையும், எம்.பி.ஏ படிப்பிற்கு மே 14 ஆம் தேதி மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரையும், எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் படிப்பிற்கு மே 15 ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரையும் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.

இவர்களுக்கான தேர்வு சென்னை, கோயம்புத்தூர், சிதம்பரம், திண்டுக்கல், ஈரோடு, காரைக்குடி உள்ளிட்ட 15 நகரங்களில் நடைபெறுகிறது. இந்தத் தேர்விற்கான முடிவுகள் ஜூன் 10 ஆம் தேதிக்கு முன்னர் வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் மே14 ஆம் தேதி நடைபெறும் தேர்வினை முன்னிட்டு அனைத்து கலை அறிவியல், பொறியியல் கல்லூரிகளுக்கு உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் விடுமுறை அறிவித்துள்ளார்.

இந்தத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைகள், அதன் உறுப்புக்கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் மண்டல கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய முதுகலை பட்டப்படிப்புகளில் 2022-23ஆம் கல்வியாண்டில் சேர உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'ஆசிரியர்களை துன்புறுத்தினால் மாணவர்களுக்கு TC மற்றும் CC-யில் காரணம்கூறி நீக்கப்படுவர்' - அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.