தமிழ்நாட்டில் கணிசமாக உயரும் கரோனா - வடமாநிலத்தில் புதிய வைரஸ்

author img

By

Published : Sep 2, 2021, 8:30 PM IST

Updated : Sep 2, 2021, 10:49 PM IST

tamilnadu corona update

தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஆயிரத்து 562 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 17 ஆயிரத்து 943 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 962 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் மேலும் புதிதாக தமிழ்நாட்டில் ஆயிரத்து 561 நபர்களுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வந்த ஒருவருக்கும் என மொத்தம் ஆயிரத்து 562 நபர்களுக்குப் புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை நான்கு கோடியே 17 லட்சத்து 39 ஆயிரத்து 326 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 26 லட்சத்து 17 ஆயிரத்து 943 பேர் கரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 16 ஆயிரத்து 478 பேர் மருத்துவம் பெற்றுவருகின்றனர்.

மேலும் மருத்துமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தவர்களில் குணமடைந்த ஆயிரத்து 684 பேர் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 66 ஆயிரத்து 504 என அதிகரித்துள்ளது. மேலும் தனியார் மருத்துமனையில் ஏழு நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 13 நோயாளிகளும் என 20 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 961 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, இந்தியாவின் உத்தரப்பிரதேசம், அஸ்ஸாம் மாநிலங்களில் கடந்த இரண்டு வாரங்களாக, கண்டறியப்படாத காய்ச்சல் காரணமாக, பலர் உயிரிழந்து வருகின்றனர்.

இதுகுறித்து வல்லுநர்கள் நடத்திய ஆராய்ச்சியில், அது 'ஸ்க்ரப் டைபஸ்' என்னும் வைரஸ் என்பது கண்டறியப்பட்டது. மைட் போர்ட் ரிக்கெட்டிசியோசிஸ் (mite-borne rickettsiosis) என்னும் வைரஸால், பலர் உத்தரப்பிரதேசத்தின் மதுரா மாவட்டத்தில் 29-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன


மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

சென்னை : 5,44,489

கோயம்புத்தூர் : 2,36,481

செங்கல்பட்டு : 1,65,592

திருவள்ளூர் : 1,15,945

சேலம் : 96,249

திருப்பூர் : 90,470

ஈரோடு : 98,677

மதுரை : 74,025

காஞ்சிபுரம் : 72,915

திருச்சிராப்பள்ளி : 74,490

தஞ்சாவூர் : 71,037

கன்னியாகுமரி : 61,040

கடலூர் : 62,373

தூத்துக்குடி : 55,507

திருநெல்வேலி : 48,468

திருவண்ணாமலை : 53,430

வேலூர் : 48,892

விருதுநகர் : 45,763

தேனி : 43,212

விழுப்புரம் : 44,860

நாமக்கல் : 48,942

ராணிப்பேட்டை : 42,590

கிருஷ்ணகிரி : 42,116

திருவாரூர் : 39,091

திண்டுக்கல் : 32,498

புதுக்கோட்டை : 29,153

திருப்பத்தூர் : 28,613

தென்காசி : 27,112

நீலகிரி : 31,807

கள்ளக்குறிச்சி : 30,148

தருமபுரி : 26,901

கரூர் : 23,136

மயிலாடுதுறை : 21,956

ராமநாதபுரம் : 20,198

நாகப்பட்டினம் : 19,732

சிவகங்கை : 19,407

அரியலூர் : 16,374

பெரம்பலூர் : 11,721

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 1,023

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 1,082

ரயில் மூலம் வந்தவர்கள் 428

இதையும் படிங்க : கரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள அரசு தயார்!

Last Updated :Sep 2, 2021, 10:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.