தமிழும் அதன் இலக்கியங்களும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை -  ஆளுநர் ரவி

author img

By

Published : Jan 21, 2023, 10:05 PM IST

தமிழ் மொழியும் அதன் இலக்கியங்களும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை - தமிழ்நாடு ஆளுநர்

ஐஏஎஸ் பயிற்சி அதிகாரிகளுடன் நடந்த கலந்துரையாடலில், தமிழ் மொழியும் அதன் இலக்கியங்களும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை, தமிழர்கள் எங்கு சென்றாலும், தமிழ்நாட்டு அடையாளத்துடனும், கலாச்சாரத்துடனும் தான் இருப்பார்கள் என தமிழ்நாடு ஆளுநர் ரவி பேசியுள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர்

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில் சிவில் தேர்வில் வெற்றி பெற்று பயிற்சியில் உள்ள (பேட்ச் 8, பேட்ச் 9) ஐஏஎஸ் அதிகாரிகள் 44 பேர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து கலந்துரையாடினர். முன்னதாக, சென்னை ஆளுநர் மாளிகையை சுற்றிப் பார்த்தவர்கள் அதனைத் தொடர்ந்து இரண்டாவது நிகழ்வாக ஆளுநர் ரவியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

பின்னர் அவர்களுடன் ஆளுநர் ரவி கலந்துரையாடினார். நாகாலாந்து நாட்டில் உங்கள் பணி அனுபவம் குறித்து ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஆளுநர், “நாகாலாந்து, மிசோரம் மக்கள் நாங்கள் இந்தியர்கள் இல்லை என்ற மன நிலையை கொண்டிருந்தனர். பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் தான் நாகாலாந்து மக்கள் நாங்கள் இந்திய நாட்டுடன் இணைந்தவர்கள் இல்லை. இந்தியாவுடன் இணைத்தால் நாங்கள் பன்றி, மாட்டு இறைச்சி உண்ணுவதில் தடை ஏற்படும் என தெரிவித்தனர்.

பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்பு வரை இந்திய மக்களும், நாகாலாந்து மக்களும் இணக்கமாக தான் இருந்தனர். அரசியல் ரீதியாக தான் மாற்றங்கள் இருந்தன. இந்த வேறுபாட்டின் காரணமாக சுதந்திர போராட்டத்தில் கூட அவர்கள் இந்தியாவுடன் இணைந்து செயல்படவில்லை. இரண்டு எல்லைகளுக்கும் தாண்டி செல்ல பாஸ் முறை ஏற்படுத்திய பின்பு தான் பிரிவு அதிகரித்தது.

அமைதி பேச்சுவார்த்தை கூட வேறு நாட்டில் தான் நடைபெற்று வந்தது. நாங்கள் இந்த பிரச்சனையை பேச ஆரம்பித்தபோது இந்தியாவில் டெல்லியில் தான் பேச்சுவார்த்தை நடைபெறும் அதற்கு ஒப்புக் கொண்டால் மேற்கொண்டு பேசலாம் என்று தெரிவித்தோம். அதற்கு அவர்களும் ஒப்புக் கொண்டனர். இது தொடர்பாக ஒப்பந்தமும் அதன் பின் கையெழுத்தானது.

இந்தியா தான் பாரதம், பாரதம் தான் இந்தியா. பிரிட்டிஷ் மிசினரி வந்த போது தான் வட தமிழக மக்கள் தென் தமிழக மக்கள் என்ற பிரிவினையை ஏற்படுத்தினர். குறிப்பாக இதனை மலைவாழ் மக்களிடம் திணிக்க முயற்சித்தனர். பல்வேறு தரப்பட்ட மக்கள் வாழும் இந்தியாவில், மக்களின் ஒற்றுமையின் பலத்தால் இணைந்து உள்ளனர்.

30 ஆண்டுகள் வரை ஐபிஎஸ் ஆக இருந்துள்ளீர்கள், பின் பல்வேறு நகரங்களில் பணி புரிந்த அனுபவம் எப்படி இருந்தது என்ற கேள்விக்கு, “பதவி ஓய்வு பெற்ற பின் அதிக நேரம் கிடைத்தது. நான் எந்த மாற்றத்தையும் உணரவில்லை. இது வேறு பகுதி தான், கேரளாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

நான் தமிழ் மொழியை கற்று கொள்ள முயற்சி செய்து வருகிறேன். இது சிறப்பான இடம், இங்குள்ள மக்கள் சிறப்பானவர்கள். தமிழ் மொழி ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமையானது அதன் இலக்கியங்கள் பழமையானது, சிறப்பானது. நான் தமிழ் எழுத்துக்களை ஆங்கில மொழி பெயர்ப்பில் தான் படித்துள்ளேன். ஏனென்றால் நான் இன்னும் தமிழை முழுமையாக கற்கவில்லை, ஆனால் தொடர்ந்து படிக்க முயற்சித்து வருகிறேன்.

இந்த தமிழ்நாடு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல், மாறாத கலாச்சாரத்தை பின்பற்றி வருகிறது. தமிழர்கள் இங்கு இருந்து சென்றாலும் அவர்களுடன் தமிழ்நாடு என்ற பேரை, கலாச்சாரத்தை கொண்டுள்ளனர், அவர்கள் பெருமையாக உணர்கிறார்கள். மகிழ்ச்சியான, இங்கு சிறப்பான புதிய அனுபவங்களை பெறுகிறேன்.

உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இங்கு வாருங்கள். தமிழ்நாட்டின் கட்டிட கலை அத்தனை அழகு கொண்டது. தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரம் கோயில், மீனாட்சி அம்மன் கோயில் என அனைத்து இடங்களிலும் கலைநயமிக்க சிற்பங்கள் உள்ளது. எங்கு சென்றாலும் அந்த மொழியை கற்று கொண்டால் மக்களுடன் நன்கு பழக உதவியாக இருக்கும். எந்த புதிய இடத்திற்கு நீங்கள் சென்றாலும் அதை கற்றுக் கொள்ளுங்கள்.

நேர்மையான எண்ணகளுடன் செயல்படுங்கள், மொழியை கற்று கொள்ளுங்கள், உங்கள் பணியை செய்யுங்கள். இக்கட்டான சூழ்நிலையில் நீங்கள் எவ்வளவு அமைதியாக செயல்படுகிறீர்கள் என்பது முக்கியம். நீங்கள் பணி செய்யும் இடம் சிறியதா, பெரியதா என்பது முக்கியமல்ல தொடர்ந்து பணியாற்றுங்கள், உங்கள் பணியில் நீங்கள் சிறந்தவராக விளங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: தன்னைத் தானே சுட்டுக் கொண்ட நீதிபதி.. காரணம் இதுதான்.!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.