மத்திய அரசு அதிகாரிகளுக்கே பாதுகாப்பு பிரச்சனையா? : அண்ணாமலை கண்டனம்!

author img

By

Published : May 26, 2023, 5:25 PM IST

Etv Bharat

வருமான வரித்துறையினர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதமாக நடந்து கொண்ட திமுகவினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், வருமான வரித்துறையினருக்கு உரியப் பாதுகாப்பு வழங்கத் தவறிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்.

சென்னை: இன்று சென்னை, கோவை மற்றும் கரூர் ஆகிய இடங்களில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொள்ள இருந்த நிலையில் கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் வருமான வரித்துறையினரை முற்றுகையிட்டனர்.

இந்த சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியுள்ளதாவது, "இன்று கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் சகோதரர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இல்லங்கள் மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொள்வதாக இருந்தது.

இதைச் சற்றும் எதிர்பாராத அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அஷோக்கின் ஆதரவாளர்கள், வருமான வரித்துறையினரை அவர்களது பணியைச் செய்யவிடாமல் முற்றுகையிட்டு அச்சுறுத்தியதோடு அவர்களது வாகனங்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அதலபாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் சூழலில், வருமான வரித்துறை அதிகாரிகளின் மீது திமுகவினர் நடத்திய வன்முறை தாக்குதல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சூழலைப் பிரதிபலிக்கும் விதமாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க: கரூரில் செந்தில் பாலாஜி ஐடி அதிகாரிகள் கார் மீது தாக்குதல்.. எஸ்.பி.அலுவலகத்தில் தஞ்சம்.. நடந்தது என்ன?

வருமான வரித்துறையினருக்குப் பாதுகாப்பு வழங்கவேண்டிய தமிழகக் காவல்துறை, தங்களுக்கு வருமான வரித்துறையினரின் சோதனை குறித்த தகவல் வராததால் பாதுகாப்பு வழங்கமுடியவில்லை என்று தெரிவித்துள்ளனர். வருமான வரித்துறையினர் வந்தது திமுகவினருக்கு மட்டும் தெரிந்து உடனடியாக சோதனை நடைபெறும் இடத்தில் கூட்டம் சேர்ந்த போது, உடனடியாக காவல்துறையினர் விரைந்து செல்லாதது ஏன்?

சட்டத்திற்குப் புறம்பான பரிவர்த்தனை சம்பந்தமான ஆவணங்கள், சொத்து விவரங்கள், பணம் மற்றும் நகை ஆகியவற்றைப் பதுக்க வருமான வரித்துறையினர் சோதனை தடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுகிறது. வருமான வரித்துறையினர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதமாக நடந்து கொண்ட திமுகவினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மேலும், வருமான வரித்துறையினருக்கு உரியப் பாதுகாப்பு வழங்கத் தவறிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்" எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  • வருமான வரித்துறையினர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதமாக நடந்து கொண்ட திமுகவினர் மீதும் வருமான வரித்துறையினருக்கு உரியப் பாதுகாப்பு வழங்கத் தவறிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று @BJP4TamilNadu சார்பாக வலியுறுத்துகிறேன்.

    அறிக்கை:…

    — K.Annamalai (@annamalai_k) May 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க: கோவை ஐடி ரெய்டு அட்ராசிட்டீஸ்.. வெஜ் பிரியாணி உடன் ஆதரவு தரும் திமுகவினர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.