'சேகர் ரெட்டி டைரியில் என் பெயர் எனும் தகவல் தவறு' - அமைச்சர் செந்தில் பாலாஜி

author img

By

Published : Sep 27, 2021, 5:52 PM IST

senthil balaji  shekar reddyt dairy issue  eb minister  eb issues  Minnagam  senthilbalaji press meet  அமைச்சர் செந்தில் பாலாஜி  செந்தில் பாலாஜி  சேகர் ரெட்டி டைரி  மின்னகம்  மின் நுகர்வோர் சேவை  சென்னை செய்திகள்  மின்வாரிய

'மின்னகம்' திறக்கப்பட்டு 100 நாள்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, சேகர் ரெட்டி டைரியில் அவர் பெயர் இருந்ததாகக் கூறும் தகவல் தவறானது எனத் தெரிவித்துள்ளார்.

சென்னை: மின் நுகர்வோரின் புகார்களைத் தொலைபேசி வாயிலாகப் பெறும் வகையில், கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி அன்று, 'மின்னகம்' எனும் மின் நுகர்வோர் சேவை மையம் திறக்கப்பட்டது.

'மின்னகம்' திறக்கப்பட்டு 100 நாள்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

மின்னகம்

அதில் அவர், 'முதலமைச்சர் மூலம் மின் நுகர்வோர் சேவை மையம் திறக்கப்பட்டது முதல், இதுவரை 3 லட்சத்து 53 ஆயிரம் புகார்கள் வரப்பட்டுள்ளன. அவற்றில் 3 லட்சத்து 50 ஆயிரம் புகார்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.

அதாவது 99 விழுக்காடு புகாருக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் மின் வாரியப் புகார்களுக்கு மொத்தமாக 107 எண்கள் இருந்தன. இவற்றை ஒரே எண்ணில் கொண்டு வரும் விதமாக 'மின்னகம்' எனும் மின் நுகர்வோர் சேவை திறக்கப்பட்டது. 'மின்னகம்' திறக்கப்பட்டு 100 நாள்கள் நிறைவடைந்துள்ளது.

வரும் காலங்களில் தமிழ்நாட்டின் மின் உற்பத்தியை அதிகரிக்கும் விதமான அறிவிப்புகள், சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் நிறைவேற்றப்படும்.

மழைக்காலத்திற்கான முன்னெச்சரிக்கைத் தயார்

கடந்த அதிமுக ஆட்சியில், ஒன்பது மாதங்களாகப் பராமரிப்பின்றி இருந்த 2 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டப் பணிகள் திமுக ஆட்சியில் நிறைவடைந்துள்ளன.

8ஆயிரத்து 905 இடங்களில் புதிய மின்மாற்றிகளை அமைப்பதற்கானப் பணிகள் அண்மையில் தொடங்கின. இதில் இரண்டாயிரம் மின் மாற்றிகள் நேற்று வரை புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பு

பருவமழைக் காலத்தில் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் தயாராக உள்ளன.

பருவமழைக்காலங்களில் மாவட்ட ஆட்சியர்களுடன் மின்வாரியப் பணியாளர்கள் இணைந்து பணி செய்வர். மின் கட்டணம் தொடர்பாக மின்னகத்திற்கு வந்த 14 லட்சத்து 69ஆயிரம் பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்பட்டன.

தமிழ்நாட்டில் 3 லட்சத்து 63 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்மாற்றிகள் உள்ளன. மின் நுகர்வோர் தங்களது மின் பயன்பாட்டு அளவைத் தெரிந்து கொள்வதற்கான ஸ்மார்ட் மீட்டர் தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஸ்மார்ட் மீட்டர் மூலம் மின் வாரிய வீடுகளில் ஏற்படும் மின் பழுதை நேரடியாக தெரிந்து கொள்ள முடியும்.

பொய் தகவல்

சேகர் ரெட்டி டைரியில் என் பெயர் இருந்ததாக வாரப் பத்திரிகை, சமூக ஊடகங்களில் வரும் தகவல் தவறானது. உண்மையிலேயே பெயர் இருந்தால் நான் பொறுப்பேற்றுக் கொள்வேன். வழிப்போக்கில் செல்பவர்கள் பதிவிடும் தகவல் அது.

என்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகக்கூறி, சம்மன் வந்ததாகக் கூறப்பட்டது தவறான தகவல். அமாலாக்கத் துறையோ, வருமான வரித்துறையோ என் மீது புகார் கூறினால் நான் பதிலளிக்கத் தயார்.

திமுக அரசால் பயன்பெற்றோர்

திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட 20 ஆயிரம் மெகாவாட் சூரிய மின்சார உற்பத்தி அறிவிப்பில் 4 ஆயிரம் மெகாவாட்டுக்கான உற்பத்தி இந்த ஆண்டே தொடங்க உள்ளது.

'மின்னகம்' மூலம் துறை அலுவலர்கள், தமிழ்நாடு முழுவதும் மின்வாரியப் பணிகளை சென்னையில் இருந்தவாறு கண்காணிப்பதற்கான சூழல் உருவாகியுள்ளது.

1990 நவம்பர் 17இல் கருணாநிதி விவசாயிகளுக்கான இலவச மின்சார அறிவிப்பை வெளியிட்டார். அதில் 12 லட்சத்து 40 ஆயிரம் பேர் பயனடைந்தனர்.

மின் தடை தொடர்பாக 250 சமூக வலைத்தளப் பதிவுகளை ஆய்வு செய்தோம். அதில் 50 பேர் மட்டுமே மின்இணைப்பு எண்ணுடன் மின்தடை தொடர்பாகப் பதிவிட்டனர். மற்றவை தவறான தகவல்களாக இருந்தன.

மின் வாரியத்தில் 56 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் அவசரமாக நிரப்ப வேண்டிய காலியிடம் தொடர்பாக கணக்கெடுப்பு நடத்தி, அரசின் நிதி நிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறினார்.

இதையும் படிங்க: 'செவிலியரைப் பணி நிரந்தரம் செய்வதே நல்லரசின் கடமை'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.