டப்பிங் படங்கள் தமிழ் சினிமாவை ஆக்கிரமித்துள்ளது - ஆர்கே.சுரேஷ்
Updated on: May 14, 2022, 12:18 PM IST

டப்பிங் படங்கள் தமிழ் சினிமாவை ஆக்கிரமித்துள்ளது - ஆர்கே.சுரேஷ்
Updated on: May 14, 2022, 12:18 PM IST
டப்பிங் படங்கள் தமிழ் சினிமாவை ஆக்கிரமித்துள்ளதாகவும், சிறிய பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் ஒதுக்குமாறு நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை: சுந்தர் பாலு இயக்கத்தில் வரலட்சுமி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்ஷா, ஆஷ்னா சவேரி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கன்னித்தீவு. இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன், சுபிக்ஷா, தியாகராஜன், ஆர்கே.சுரேஷ், பேரரசு மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய ஆர்.கே.சுரேஷ், 1000 கோடி, 2000 கோடி ரூபாய் என்பது பெரிய விஷயம் இல்லை. நல்ல கதை உள்ள படங்கள் நிச்சயம் வெற்றி பெறும். நல்ல கதைகள் ஓடிடியை நாடி செல்கிறது. நல்ல கதைகளுக்கு திரையரங்கு கிடைப்பதில்லை.
70 சதவீதம் ரீஜினல் படங்கள் 30 சதவீதம் மற்ற மொழி படங்கள் வர வேண்டும் இதுதான் மற்ற மாநிலங்களில் நடக்கிறது. ஆனால் தமிழ் நாட்டில் அப்படி இல்லை. டப்பிங் படங்கள் தான் தமிழ் சினிமாவை ஆக்கிரமித்துள்ளது.
திரையரங்கு வாழ வேண்டும் என்றால் சிறிய பட்ஜெட் படங்கள் வெற்றி பெற வேண்டும். தமிழ் சினிமாவில் வெளியாகாமல் இருக்கும் 400 படங்களை எப்படி வெளியிடுவது என்று நாங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் பேசி வருகிறோம்.
நல்ல கதைகள் இல்லை என்றால் படம் ஓடாது. இயக்குனர்களுக்கு நான் சொல்வது கதையில் கவனம் செலுத்துங்கள். கூத்தாடி கூத்தாடி என்று எங்களை சொல்ல வேண்டாம். நாங்கள் உங்களை மகிழ்விப்பவர்கள் என்றார்.
இதையும் படிங்க:'மக்களிடம் அமைதி திரும்பினால் போதும்' - நடிகர் ஆர்.கே. சுரேஷ்
