இரண்டாவது கட்ட மிடுக்கான குடியரசு தின ஒத்திகை

இரண்டாவது கட்ட மிடுக்கான குடியரசு தின ஒத்திகை
சென்னையில் முப்படைகளின் மிடுக்கான அணிவகுப்பு, பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், பிற மாநில மக்களின் பாரம்பரிய நடனம் என சுமார் ஒன்றரை மணி நேரம் ஒத்திகை நடைபெற்றது.
சென்னை: நாடு முழுவதும் குடியரசு தினவிழா வரும் 26ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன் ஒருபகுதியாக தமிழ்நாட்டில் சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ஆளுநர் பங்கேற்று தேசியக்கொடியை ஏற்றி வைத்து, முப்படைகளின் அணிவகுப்பை ஏற்பார்.
இந்த நிகழ்ச்சியானது ஆண்டுதோறும் மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை முன்பாக நடைபெறும். தற்போது அங்கு நடைபெற்று வரும் மெட்ரோ பணிகள் காரணமாக உழைப்பாளர் சிலை அருகே நடைபெறுகிறது. இதனையொட்டி முதற்கட்ட ஒத்திகை கடந்த 20ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இன்று (ஜன.23) இரண்டாவது கட்ட ஒத்திகை நடைபெற்றது.
இதில் நாட்டின் முப்படைகள், தமிழ்நாடு அரசு காவல் துறை, என்எஸ்எஸ் உள்ளிட்ட பிரிவினரின் மிடுக்கான அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. மேலும், தமிழ்நாடு பள்ளி, கல்லூரி மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், மஹாராஷ்டிரா உள்ளிட்ட பிற மாநிலங்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகையும் நடைபெற்றது.
அதனையடுத்து துறை சார்ந்து நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களை விளக்கும் விதமாக அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் நடைபெற்றது. குடியரசு தினத்திற்கான இறுதி ஒத்திகையானது நாளை மறுநாள் ஜன.24ஆம் தேதி நடைபெறுகிறது.
இதன் காரணமாக சென்னையின் காமராஜர் சாலை, வாலாஜா சாலை, சிவானந்தா சாலை உள்ளிட்டப் பிரதான சாலைகளில் காலை 6:30 மணி முதல் 9 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டது.
இதையும் படிங்க: Corporation of Chennai: பொது கழிப்பறைகளின் பராமரிப்பை தனியாருக்கு வழங்க முடிவு!
