ETV Bharat / state

ஓ.பி.எஸ், டி.டி.வி மற்றும் சசிகலாவுக்கு எந்த நிலையிலும் கட்சியில் இடமில்லை: ஜெயக்குமார்

author img

By

Published : Nov 25, 2022, 10:30 PM IST

ஓ.பி.எஸ், டி.டி.வி மற்றும் சசிகலாவுக்கு எந்த நிலையிலும் கட்சியில் இடமில்லை
ஓ.பி.எஸ், டி.டி.வி மற்றும் சசிகலாவுக்கு எந்த நிலையிலும் கட்சியில் இடமில்லை

எங்களுடைய கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருக்கு எந்த நிலையிலும் இடமில்லை என்பதை தெளிவுப்படுத்துகிறேன் எனவும் ஓபிஎஸ் உடன் இனிமேல் எப்போதும் இணைய மாட்டோம் இதற்காக பொதுக் குழுவே முற்றுப்புள்ளி வைத்துவிட்டது என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்

சென்னை: பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜெயக்குமார் கூறியதாவது, இன்றைய நாளிதழில் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவுக்கு 10 இடங்கள் ஒதுக்கப்படுவதாகவும், அதில் பாஜக ஒரு இடத்தை டிடிவி தினகரனுக்கு வழங்குவதாகவும் வெளியான செய்தி குறித்த கேள்வி எழுப்பினர். அதற்கு பாஜக சித்தாந்தம் வேறு எங்களுடைய சித்தாந்தம் வேறு. பாஜக கொள்கை வேறு எங்களுடைய கொள்கை வேறு, என எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே தெளிவாக விளக்கமளித்து விட்டார் என பதிலளித்தார்.

"பா.ஜ.க. தேசிய கட்சி மற்றும் எங்களுடைய தோழமைக் கட்சி. அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும். எங்களுடைய கூட்டணியில் ஓ.பன்னீர் செல்வம் டிடிவி தினகரன், மற்றும் சசிகலா ஆகியோருக்கு எந்த நிலையிலும் இடமில்லை என்பதை தெளிவுப்படுத்துகிறேன்", என்றும், ஒரு கட்சியை களங்கப்படுத்தும் நோக்கி செய்தி வெளியிடப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு போன்றவற்றுக்கு எதிராக போராட்டம், தலைவர்கள் பிறந்த நாள் என மக்கள் பிரச்சனைக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் குரல் கொடுத்துள்ளோம். ஊரக உள்ளாட்சி துறையில் ஊழல் குறித்து பேசியவர், பல துறைகளில் ஊழல் செய்து குடும்பமாக பணம் கொள்ளையடித்தது திமுக ஆட்சி. கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன். திமுக ஆட்சியில் இது தான் இருக்கிறது எனவும், மலைமுழுங்கி மகா தேவனை பார்த்திருக்கிறீர்களா என திமுகவை ஜெயக்குமார் விமர்சனம் செய்தார்.

மேலும் ஒரு பிளக்ஸ்க்கு அதிக பணம் திமுகவில் வாங்கப்படுவதாகவும், அதிமுக ஆட்சியில் குறைந்த பணம் தான் ஆனது என்றும், மக்களிடம் பணம் கொள்ளையடிப்பதாக குற்றம் சாட்டினார்.

ஆளுநருடனான எடப்பாடி பழனிசாமி சந்திப்பு குறித்து பேசியவர், ஆளுநர் நிர்வாகத்தின் தலைவர். ஆளுநரிடம் அரசியல் எதுவும் பேசவில்லை. ஆளுநர் மாளிகை அதற்கான இடமும் இல்லை என்றும், திமுக அரசு தமிழ்நாடு மக்களுக்கு துரோகம் செய்வதால் ஆளுநரை சந்தித்து திமுக செய்த குற்றங்களை தெரிவிக்க தான் சென்றோம் எனவும், திமுகவிற்கு பதவி வெறி தான் இருக்கிறது எனவும் தெரிவித்தார்.

திமுக அரசு ஆட்சியில் இருந்த 17 வருடத்தில் மக்கள் கொடுத்த அதிகாரத்தை வைத்து தமிழ்நாட்டிற்கு எவ்வளவோ செய்திருக்கலாம். ஆனால் அவர்கள் எதுவும் செய்யவில்லை. திமுகவோ அதை பற்றி வாய் திறக்க மாட்டார்கள். காங்கிரஸ் தலைவர் என்றால் ஸ்டாலின் தான் எனவும், ஸ்டாலினால் உருவாக்கப் பட்டவர் தான் செல்வ பெருந்தொகை. அவர் ஸ்டாலினின் ஊது கோல், வளர்ப்பு எனவும், செல்வப் பெருந்தகை எப்படியாவது காங்கிரஸ் தலைவராக வேண்டும் என்று ரஞ்சன் குமார் கூறியதாக ஜெயக்குமார் சுட்டி காட்டி பேசினார்.

தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. ஓபிஎஸ் உடன் இனிமேல் எப்போதும் இணைய மாட்டோம். இதற்காக பொதுக் குழுவே முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. ஓபிஎஸ் திமுகவின் ஊதுகுழலாக செயல்படுகிறார். மீண்டும் இணைய வாய்ப்பில்லை என்பதில் தலைவரும் உறுதியாக இருக்கிறார் என்றார்.

இது தொடர்பாக மோடி, அமித்ஷா முயற்சி எடுத்தால் இணைவீர்களா என்ற கேள்விக்கு, கட்சி விவகாரத்தில் அவர்கள் தலையிடுவதற்கு அவர்கள் விரும்புவது இல்லை. அதிமுக தொண்டர்கள் தெளிவாக இருக்கிறார்கள். யார் நினைத்தாலும் கட்சிக்குள் பிரச்சனை ஏற்படுத்த முடியாது என்றும் கூறினார்.

இதையும் படிங்க: "காசி தமிழ் சங்கமத்துக்கும் தமிழ்நாடு அரசுக்கும் தொடர்பு இல்லை" - அமைச்சர் சேகர்பாபு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.