நீட் தேர்வு விண்ணப்பங்களைத் திருத்த காலக்கெடு நீட்டிப்பு

author img

By

Published : Oct 11, 2021, 12:33 PM IST

நீட்

நீட் தேர்வு விண்ணப்பத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடையவிருந்த நிலையில், மேலும் மூன்று நாள்களுக்கு காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை: நீட் தேர்வு விண்ணப்பங்களைத் திருத்த மேலும் மூன்று நாள்கள் அவகாசம் அளித்து தேசியத் தேர்வு முகமை அறிவித்துள்ளது.

நீட் தேர்வு விண்ணப்பத்தில் பாலினம், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடையவிருந்த நிலையில், மேலும் மூன்று நாள்களுக்கு தற்போது காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் வரும் 13ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தில் திருத்தங்கள் இருந்தால் மாற்றிக்கொள்ளலாம் என்றும், இது குறித்த சந்தேகங்களைத் தெரிந்துகொள்ள தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அக்டோபர் மூன்றாம் வாரத்தில் நீட் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: ஆர்யன் கான் பிணை மனு இன்று விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.