புதிய ஆளுநரை வரவேற்று மு.க. ஸ்டாலின் ட்வீட்

author img

By

Published : Sep 10, 2021, 7:07 AM IST

http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/10-September-2021/13021407_ravi1.JPG

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என். ரவியை வரவேற்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சென்னை: தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவியை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று (செப். 9) உத்தரவிட்டுள்ளார். பிகார் மாநிலத்தின் தலைநகரான பாட்னாவில் 1952ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி பிறந்தவர் ஸ்ரீ ரவீந்திர நாராயண் ரவி.

இவர், 1974ஆம் ஆண்டு இயற்பியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். தனது கல்லூரி படிப்பை முடித்த ரவி பின்னர், பத்திரிகைத் துறையில் பணியாற்றினார். இதனைத் தொடர்ந்து, 1976ஆம் ஆண்டு கேரளாவிலிருந்து இந்தியக் காவல் பணி அலுவலராகத் தேர்வாகினார்.

முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்ட ட்விட்
முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்ட ட்வீட்

ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின்!

பின்னர், 2012ஆம் ஆண்டு இந்திய உளவுத் துறையின் சிறப்பு இயக்குநராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார். இதனைத் தொடர்ந்து, அவர் தேசிய நாளிதழ்களில் தேசியப் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து கட்டுரைகளை எழுதிவந்தார். 2018ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகராகப் பணியாற்றினார்.

தொடர்ந்து 2019ஆம் ஆண்டு நாகலாந்து மாநிலத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்றார். தற்போது, ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். நாகலாந்து ஆளுநர் பணியினை அஸ்ஸாம் மாநில ஆளுநர் ஜெக்தீஷ் முகி கூடுதலாகக் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் பொறுப்பு ஆளுநராக இருக்கும் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நிரந்தர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் புதிய ஆளுநர் ஆர்.என். ரவியை வரவேற்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், “தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆர்.என். ரவிக்கு எனது வணக்கமும் வாழ்த்தும்! தங்களது வருகை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், வளத்துக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கட்டும்! தங்களை தமிழ்நாடு வரவேற்கிறது!” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.