ஐந்தாம் கட்ட பரப்புரை மேற்கொள்ளவுள்ள திமுக

author img

By

Published : Feb 23, 2021, 4:41 PM IST

ஐந்தாம் கட்ட பரப்புரை மேற்கொள்ளவுள்ள திமுக

சென்னை : திமுக சார்பில் நடைபெறவுள்ள ஐந்தாம் கட்ட தேர்தல் பரப்புரை குறித்து திமுக தலைமை கழகம் அறிவிப்பு விடுத்துள்ளது.

சட்டப்பேரவை தேர்தலையொட்டி திமுக, அதிமுக கட்சிகள் தீவிர பரப்புரை மேற்கொண்டுவருகின்றனர். திமுக சார்பில் கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

இதன் நான்காம் கட்ட பரப்புரை கடந்த 17ஆம் தேதி முதல் 22ஆம் தேதிவரை நடைபெற்றது. இதையடுத்து ஐந்தாம் கட்ட பரப்புரையை குறித்த விவரங்களை தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி வரும் 26ஆம் தேதி முதல் 28ஆம் தேதிவரை ஐந்தாம் கட்ட பரப்புரை நடைபெறுகிறது. 26ஆம் தேதி விழுப்புரம் வடக்கிலும், காஞ்சிபுரம் தெற்கிலும் நடைபெறுகிறது. 27ஆம் தேதி காஞ்சிபுரம் வடக்கிலும், சென்னை- வடக்கு, வடகிழக்கு, கிழக்கு ஆகிய பகுதிகளில் நடைபெறுகிறது, 28ஆம் தேதியன்று சென்னை மேற்கு, தெற்கு, தென்மேற்கில் பரப்புரை நடைபெறுகிறது.

இதையும் படிங்க : இடைக்கால பட்ஜெட்டை முழுவதுமாக புறக்கணிக்கிறது திமுக - துரைமுருகன் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.