தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் - மகளிர் உரிமைத் தொகை குறித்த முக்கிய அறிவிப்பு?

author img

By

Published : Mar 19, 2023, 7:15 AM IST

Etv Bharat

2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நாளை சட்டசபையில் தாக்கல் செய்கிறார்.

சென்னை: கடந்த 2021ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது. ஆட்சிப் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இதுவரை ஒரு இடைக்கால பட்ஜெட்டையும், ஒரு முழு பட்ஜெட்டையும் நிதி அமைச்சர் பழனிவேல் தியகராஜன் தமிழக சட்டசபபையில் தாக்கல் செய்து உள்ளார்.

இந்நிலையில் 2023-24 ஆம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை அமைச்சர் பழனிவேல் தியகாராஜன் நாளை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தொலைநோக்கு திட்டங்களுக்கு இந்த பட்ஜெட்டில் முன்னுரிமை கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் நடந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவது தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் இடம் பெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனால் வரும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்யில் மகளிருக்கான உரிமைத் தொகை குறித்த முக்கிய அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் அரசு ஊழியர் உள்ளிட்டோருக்கு பலன் கிடைக்குமா?, யாருக்கெல்லாம் இந்த திட்டம் பயன் பெறும் என மகளிர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பினரை சமாதானப்படுத்த அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது.

பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்துவது உள்பட பல்வேறு அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு 2022 - 23 ஆம் நிதி ஆண்டில் பட்ஜெட் வருவாய் பற்றாக்குறை 52 ஆயிரத்து 781 கோடி ரூபாயாக கணக்கிடப்பட்டு உள்ளது. கடந்த நிதி ஆண்டை காட்டிலும் இது குறைவு என்பதால் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டிலும், வருவாய் பற்றாக்குறையை மேலும் குறைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடப்பு பட்ஜெட்டில் மாநிலத்தின் கடன் 6 லட்சத்து 53 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது உள்ள கடன் விவரங்கள் நாளை வெளியாகும் என பட்ஜெட்டில் தெரிய வரும். மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட அறிவிப்புகள் பட்ஜெட்டில் இருக்குமாயின் மாநிலத்தின் கடன் அளவு இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

நாளை (மார்ச்.10) காலை 10 மணிக்கு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப் பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். முன்னதாக சபாநாயகர் அப்பாவு தலைமையில், சட்டசபை அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில், வேளாண் பட்ஜெட் தாக்கல், பட்ஜெட் கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும்.

இதையும் படிங்க: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்.. இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் கடிதம்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.