ETV Bharat / state

எம்பிபிஎஸ் முதலாமாண்டு மாணவர்களுக்கு பிப்.14 முதல் வகுப்புகள் தொடக்கம்

author img

By

Published : Feb 13, 2022, 7:21 AM IST

தமிழ்நாட்டில் உள்ள 38 மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நாளை (பிப். 14) முதல் தொடங்கப்படுவதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

முதலாமாண்டு எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு பிப்ரவரி 14 முதல் வகுப்புகள் தொடக்கம்
முதலாமாண்டு எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு பிப்ரவரி 14 முதல் வகுப்புகள் தொடக்கம்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பிற்கான கலந்தாய்வு ஜனவரி 27ஆம் தேதி முதல் நடைபெற்றது. கடந்த 27ஆம் தேதி சிறப்புப் பிரிவினருக்குக் கலந்தாய்வும், 28ஆம் தேதி 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின்கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வும் நடைபெற்றன.

தமிழ்நாட்டில் உள்ள 38 மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நாளை (பிப். 14) முதல் தொடங்கப்படுவதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

முதலாமாண்டு எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு பிப்ரவரி 14 முதல் வகுப்புகள் தொடக்கம்
முதலாமாண்டு எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு பிப்ரவரி 14 முதல் வகுப்புகள் தொடக்கம்

மேலும், இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குநரகம், 'மாணவர்களுக்கு கரோனா தடுப்பு விதிகளுக்கு உட்பட்டு வகுப்புகளையும், தங்கும் விடுதிகளை நடத்த வேண்டும். அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களுக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கக் கூடாது.

7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் எவ்வித கல்வி உதவித்தொகைக்கும் விண்ணப்பிக்கக் கூடாது. ஆள்மாறாட்டத்தை தவிர்க்க மாணவர்களின் கைரேகைகளை கண்டிப்பாக பெற வேண்டும்.

முதலாமாண்டு எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு பிப்ரவரி 14 முதல் வகுப்புகள் தொடக்கம்
முதலாமாண்டு எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு பிப்ரவரி 14 முதல் வகுப்புகள் தொடக்கம்

மார்ச் 31க்குள் கைரேகைகளை வழங்காத மாணவர்கள் வகுப்புக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்' என்று அறிவுறத்தியுள்ளது. தமிழ்நாட்டில் முதற்கட்ட கலந்தாய்வு மூலம் 5,076 மாணவர்கள் மருத்துவக் கல்வியில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தமிழ்ப் பெண்ணை மணமுடிக்கும் மேக்ஸ்வெல்: தமிழில் அழைப்பிதழ்

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.