கொடைக்கானல், ராமேஸ்வரத்தில் ஹெலிகாப்டர் இறங்குதளம்!

author img

By

Published : Sep 4, 2021, 4:51 PM IST

Helicopter

கொடைக்கானல், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்க ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.

சென்னை : தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலங்களை இணைக்கும் விதமாக மதுரை, கொடைக்கானல், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்க ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கப்படும் எனச் சுற்றுலாத்துறை அமைச்சர் மதி வேந்தன் பேரவையில் புதிய 30 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அவை,

  1. கன்னியாகுமரியில் உள்ள ஐயன் திருவள்ளுவர் சிலையை இரவிலும் கண்டு மகிழும் வகையில் லேசர் தொழில்நுட்ப உதவியுடன் ஒளியூட்டப்படும்.
  2. தமிழ் பண்பாடு மற்றும் பாரம்பரிய சின்னமாக விளங்கிய துறைமுக நகரமான பூம்புகார் புனரமைக்கப்படும்.
  3. தமிழ்நாட்டில் உள்ள 300 சுற்றுலாத்தலங்களில் சர்வதேச தரத்திற்கு இணையான வசதிகளை ஏற்படுத்த சுற்றுலா பெருந்திட்டம் தயாரிக்கப்படும்.
  4. தமிழ்நாட்டில் உள்ள அணைக்கட்டுகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் சுற்றுலாத் தலங்களாக மேம்படுத்தப்படும்.
  5. மாநிலத்தின் சுற்றுலா வளர்ச்சிக்காக தமிழ்நாடு சுற்றுலா கொள்கை உருவாக்கப்படும்.
  6. கொல்லிமலை பல்வேறு வசதிகளுடன் கூடிய முக்கிய சுற்றுலாத்தலமாக மேம்படுத்தப்படும்.
  7. தமிழ்நாட்டின் சுற்றுலா இடங்களை மேம்படுத்த சுற்றுலாத்தலங்கள் வளர்ச்சி திட்டம் உருவாக்கப்படும்.
  8. தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலங்களை இணைக்கும் விதமாக மதுரை, கொடைக்கானல், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்க ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கப்படும்.
  9. தமிழ்நாட்டில் மலை வாழிடங்கள் வனப் பகுதிகள் மற்றும் கடற்கரை பகுதிகள் சாகசச் சுற்றுலா இடங்கள் மற்றும் சுற்றுச்சூழல் திறந்தவெளி முகாம் ஏற்படுத்தப்படும்.
  10. முட்டுக்காடு படகு இல்லத்தில் மிதவை படகுடன் கூடிய உணவகம் அமைக்கப்படும்.
  11. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக தங்கும் விடுதிகளை இணையதள பயண நிறுவனங்களின் இணையதளத்தில் இடம்பெறச் செய்து பிரபலப்படுத்தி வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  12. தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் சுற்றுலாத்தலம் பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.
  13. ஜவ்வாது மலை பகுதியை பல்வேறு வசதிகளுடன் கூடிய சுற்றுலாத்தலமாக மேம்படுத்தப்படும். ஜவ்வாது மலையில் சுற்றுச் சூழலுடன் கூடிய தங்கும் இடங்கள் பூங்காக்கள் பல்வேறு சாகச விளையாட்டுக்கள் ஏற்படுத்துதல் பீமா நீர்வீழ்ச்சி பகுதியை மேம்படுத்துதல் ஜமுனாமரத்தூர் ஏரியில் புதிய அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.
  14. ராமேஸ்வரம் கூடுதல் வசதிகளுடன் சிறந்த சுற்றுலாத்தலமாக மேம்படுத்தப்படும். ராமேஸ்வரம் ஒரு புனித நகரம். இந்நகரத்திற்கு வருகைதரும் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக வழிகாட்டி பலகைகள் பல்துறை விரிவாக்கம் நடை பாதை அமைத்தல் ஒருங்கிணைந்த வாகனம் நிறுத்துமிடம் பாரம்பரிய சின்னங்களை ஒளி ஊட்டுதல் பார்வையாளர் மாடம் அமைத்தல் பறவைகள் சரணாலயப் பகுதி கோதண்டராமர் கோயில் ராமர் பாதம் போன்ற இடங்களில் மேம்படுத்துதல் மற்றும் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.
  15. ஏலகிரியில் சாகசச் சுற்றுலா பல்வேறு பிரிவுகளுடன் மேம்படுத்தப்படும். சாகசச் சுற்றுலா பிரிவுகளை அமைப்பதற்கு உகந்த தலமாக ஏலகிரி மலையின் உயரமும் அமைப்பும் அமைந்துள்ளது எனவே இளம் வயது சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் சாகச சுற்றுலாவின் விரிவான பாராகிளைடிங் மலை ஏற்றம் மற்றும் இயற்கை வழி நடைப்பயணம் திறந்தவெளி முகாம்கள் போன்ற சுற்றுலா வசதிகள் ஏலகிரி மலையில் ஏற்படுத்தப்படும்.
  16. சொகுசு கப்பல் சேவை மற்றும் படகுச் சேவையை சுற்றுலா நகரங்கள் இடையே அறிமுகப்படுத்த சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்படும். சுற்றுலாப் பயணிகள் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கடற்பகுதியில் குறைந்த கால அளவில் பயணம் மேற்கொள்வது சொகுசு படகு பயண சுற்றுலா சுற்றுலாக்கள் வெளிநாடுகளில் மிகவும் வரவேற்பைப் பெற்றுள்ளவை. இவ்வகையில் உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் நகரங்களான ராமேஸ்வரம் மற்றும் கன்னியாகுமரி இடையே சொகுசு கப்பல் சேவை மற்றும் படகு சேவை தொடங்குவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்படும்.
  17. பிச்சாவரம் சுற்றுலா தலம் கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தப்படும். பிச்சாவரத்தில் அமைந்துள்ள அலையாத்தி காடுகளை காண்பதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருகின்றனர். மேலும் சுற்றுலா பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்து தரும் வகையில் பூங்கா திறந்தவெளி முகாம் காட்சி கோபுரம் படகு குழாம் தங்கும் அறைகள் மற்றும் உணவகம் போன்றவை பிச்சாவரம் படகு குழாம் பகுதியில் மேம்படுத்தப்படும்.
  18. முதலியார்குப்பம் படகு குழாம் மற்றும் அருகில் உள்ள தீவுப் பகுதியை கூடுதல் வசதிகளுடன் ரூபாய் 50.00 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். ஓடி ஒரு ஏரியில் அமைந்துள்ள தீவு பகுதிக்கு சுற்றுலா பயணிகள் படகில் சென்று வர அனுமதிக்கப்படுகின்றனர். தீவுப்பகுதி சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால் இங்கு நீர் விளையாட்டுகள் கடற்கரை விளையாட்டுகள் தேனீர் விடுதி போன்ற வசதிகளுடன் தங்கும் வசதி கொண்ட படகு இல்லம் ரூபாய் 50.00 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
  19. கோயம்புத்தூர் மாவட்டம் உக்கடம் மற்றும் வாலாங்குளம் ஏரியில் புதிய படகு குழாம் ஏற்படுத்தப்படும். கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்தும் விதமாக உக்கடம் மற்றும் வாலாங்குளம் ஏரியில் படகு சவாரி மற்றும் இதர சுற்றுலா வசதிகளுடன் கூடிய புதிய படகு குழாம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் ஏற்படுத்தப்படும்.
  20. தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான மலைவாசஸ்தலங்கள் ஆன்மிக தலங்களில் கேபிள் கார் வசதியை ஏற்படுத்த சாத்தியக்கூறு மேற்கொள்ளப்படும்.
  21. சுற்றுலா விருந்தோம்பல் திறன் மேம்பாடு மற்றும் சான்றிதழ் இத்திட்டம் தொடர்பாக படிப்பு அறிமுகப்படுத்தப்படும்.
  22. சுற்றுலாத் தொழில் சார்ந்த துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி உணவு தயாரிப்பு தங்குமிட பராமரிப்பு உணவு மற்றும் பானங்கள் பரிமாறுதல் வரவேற்பாளர் பகுதியில் திறன் மேம்படுத்துதல் உணவு தரக்கட்டுப்பாடு குறித்த பயிற்சிகளை வழங்குதல், சமையலர்களுக்கு பல்வேறு வகையான உணவு தயாரிக்கும் முறைகளை பயிற்றுவித்தல் போன்றவர்களை உள்ளடக்கிய சுற்றுலா விருந்தோம்பல் திறன் மேம்பாடு மற்றும் சான்றிதழ் திட்டம் தொடர்பான படிப்பு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் அறிமுகப்படுத்தப்படும்.
  23. சுற்றுலாத் துறை சார்ந்த தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சுற்றுலா விருது வழங்கப்படும்.
  24. கடற்கரைகளுக்கு ப்ளூ பிளாக் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் உலகின் பாதுகாப்பான தூய்மையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு இணக்கமான கடற்கரைகளுக்கு ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா அமைப்பால் வழங்கப்படும் ப்ளூ பிளாக் அங்கீகாரத்தை பெறுவதற்கு தமிழ்நாட்டின் முக்கிய கடற்கரையான மெரினா கோவளம் மாமல்லபுரம் முதலியார்குப்பம் மனோரா அதியமான் முட்டம் மற்றும் பல்வேறு கடற்கரைகளுக்கு தரம் தரம் உயர்த்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
  25. கிராமிய மற்றும் மலைத்தோட்டப் பயிர் சுற்றுலா மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  26. தமிழ்நாட்டில் மருத்துவ சுற்றுலா பல்வேறு தொழில் பங்குதாரர்களின் ஒத்துழைப்புடன் மேம்படுத்தப்படும் ஆயுர்வேதம் யோகா யுனானி சித்தா இயற்கை மருத்துவம் மற்றும் அலோபதி மருத்துவ சிகிச்சை முறைகளில் உலக தரத்திலான மருத்துவ சேவைகள் குறைந்த செலவில் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகள் வழங்குகின்றன மருத்துவம் பிரபலம் அடைந்து வருவதால் வெளிநாட்டினர் மருத்துவ சேவைகளை பெறுவதற்கு அதிக அளவில் வருகை புரிகின்றனர் அவர்களிடையே பல்வேறு சுற்றுலாத் தொழில் பங்குதாரர்களின் ஒத்துழைப்புடன் மருத்துவ சுற்றுலா மேம்படுத்தப்படும்.
  27. நீர் விளையாட்டுக்கள் சாகச விளையாட்டுக்கள் தங்கும் வசதியுடன் கூடிய வாகன இயக்குபவர்கள் மற்றும் திறந்தவெளி முகாம்களில் நடத்துபவர்களுக்கு ஆன வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்படும் தமிழ்நாட்டில் அமைந்துள்ள மலை வாழ்விடங்கள் ஏரிகள் கடற்கரைகள் பல்வேறு நீர் சாகச விளையாட்டுக்கள் மற்றும் திறந்த வெளி முகாம்கள் நடத்துவதற்கும் தங்கும் வசதியுடன் கூடிய வாகன சுற்றுலாவிற்கு இளைஞர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதால் அதனை நடத்துபவர்களுக்கு தகுதிகள் பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு செய்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்படும்.
  28. சென்னை மெரினா கடற்கரையில் ராயல் மெட்ராஸ் யாட் கிளப் உடன் இணைந்து பொழுதுபோக்கு படகு சவாரி தொடங்கப்படும்.
  29. நாட்டின் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள 75 சுற்றுலாத் தலங்கள் விளம்பரப்படுத்தப்படும்.
  30. பொன்விழா கொண்டாடும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக துணை மறுசீரமைக்க திட்ட ஆலோசகர் இன் திட்ட அறிக்கை பெறப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் தமிழ்நாட்டின் சுற்றுலா வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பொன்விழா ஆண்டில் ஓட்டல்கள் சுற்றுலா மற்றும் போக்குவரத்து பிரிவு தொலைநோக்கி இல்லங்கள் படகுகள் மற்றும் செயல்பாடுகளில் தரத்தை மேம்படுத்தி அதிக லாபம் ஈட்டும் வகையில் மறுசீரமைக்க திட்ட ஆலோசகரின் அறிக்கை பெறப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

இவை சுற்றுலாத்துறை அமைச்சர் மதி வேந்தன் வெளியிட்ட அறிவிப்புகள் ஆகும்.
இதையும் படிங்க : எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பேச்சு காணொலிகளையும் வெளியிட கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.