காங்கிரசுக்கு கை கொடுப்பாரா கமல்ஹாசன்; நாளை கூடுகிறது மநீம செயற்குழு கூட்டம்

author img

By

Published : Jan 24, 2023, 6:53 PM IST

காங்கிரசுக்கு கை கொடுப்பாரா கமல்ஹாசன்; நாளை கூடுகிறது மநீம செயற்குழு கூட்டம்

ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தலில் தனித்து போட்டியா அல்லது காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவா என்பது குறித்து முடிவெடுக்க நாளை கூடுகிறது, ம.நீ.ம செயற்குழு கூட்டம்.

சென்னை: ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனிடம் ஆதரவு கோரியிருந்தார். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன் செயற்குழு கூட்டத்தில் ஆலோசித்து கூட்டணியா அல்லது தனித்து போட்டியா என்று அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தலில் குறித்து ஒவ்வொரு கட்சியும் தங்களுடைய நிலைப்பாட்டை தெரிவித்து வரும் நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்க, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் நாளை காலை 11 மணியளவில் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டமானது நடைபெற உள்ளது.

ராகுல் காந்தியுடன் இந்திய ஒற்றுமை பயணத்தில் கலந்து கொண்டதையடுத்து அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் கமல்ஹாசன், காங்கிரசுடன் கூட்டணி என்ற நிலையில் உள்ளது. இதன்படி ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு கமல்ஹாசன் ஆதரவு அளிப்பாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

நாளை நடைபெறும் கூட்டத்தில் கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி இதுதொடர்பாக இறுதி முடிவை எடுக்க உள்ளார். ஈரோடு கிழக்குத் தொகுதியில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி 10 ஆயிரம் வாக்குகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'சேர் எடுத்துட்டு வர இவ்வளவு நேரமா?' திமுக நிர்வாகி மீது கல் வீசிய அமைச்சர் நாசர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.