ETV Bharat / state

சென்னை நகைக்கடன் நிறுவனத்தில் ரூ.20 கோடி நகைகள் கொள்ளை, 4 தனிப்படைகள் அமைப்பு

author img

By

Published : Aug 13, 2022, 6:16 PM IST

Updated : Aug 13, 2022, 9:08 PM IST

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஃபெட் நகைக்கடன் நிறுவனத்தில் இருபது கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை , அதில் பணியாற்றிய நபர்களே கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai gold theft
Chennai gold theft

சென்னை: அரும்பாக்கம் பகுதியில் ஃபெட் நகைக்கடன் நிறுவனத்தின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அங்கு இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 3 பேர் , காவலாளி மற்றும் ஊழியர்களை கட்டிப்போட்டு 20 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

மேலும் மயக்க மருந்தினையும் பயன்படுத்தி இருக்கின்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்று அரும்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கூடுதல் ஆணையர் அன்பு மற்றும் துணை ஆணையர் விஜயகுமார் நேரில் ஆய்வு நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் வங்கியில் வேலை பார்த்த நபர்களே கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதில் கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டது ஊழியர் முருகன் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஃபெட் வங்கியில் இருபது கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளை

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு கூறுகையில் கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: யூடியூப் பார்த்து கொள்ளையடித்த பட்டதாரி காதல் ஜோடி கைது

Last Updated : Aug 13, 2022, 9:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.