ETV Bharat / state

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணையும் ஜெயலலிதா பல்கலைக்கழகம்

author img

By

Published : Aug 31, 2021, 8:28 PM IST

விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழத்துடன் இணைப்பதற்கான சட்டமசோதா சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது.

jayalalitha university  annamalai university  jayalalitha university merge with annamalai university  chennai news  chennai latest news  அண்ணாமலை பல்கலை யுடன் இணையும் ஜெயலலிதா பல்கலை  அண்ணாமலை பல்கலைகழகம்  ஜெயலலிதா பல்கலைகழகம்  சட்டமசோதா
ஜெயலலிதா பல்கலைகழகம்

சென்னை: கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில், விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில், புதிய பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான அறிவிப்பு வெளியானது.

ஆனால், ஆட்சி மாறிய நிலையில் போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. அதே போல் இடம் ஒதுக்கவில்லை என கூறி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கான சட்டமுன்வடிவை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.

இதைக் கண்டித்து அதிமுக வெளிநடப்பு செய்தது.

இதனைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பின் மூலம் உறுப்பினர்களின் ஆதரவுடன், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துடன் இணைப்பதற்கான சட்டமசோதா ஒரு மனதாக நிறைவேறியது.

இதையும் படிங்க: போதை பொருள் விற்பனையை தடுக்க சட்ட திருத்தம் - முதலமைச்சர் ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.