உட்கட்சி தேர்தல்; திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை

author img

By

Published : Sep 21, 2022, 8:18 AM IST

உட்கட்சி தேர்தல்; பொதுக்குழு நடத்துவது குறித்து முக்கிய நிர்வாகிகளுடன் திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை

திமுக உட்கட்சி தேர்தல், பொதுக்குழு உள்ளிட்டவை குறித்து முக்கிய நிர்வாகிகளுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

சென்னை: திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், கே.என்.நேரு, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர். மாநிலம் முழுவதும் திமுகவின் 15-வது உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருவது குறித்தும் அடுத்த மாதம் பொதுக்குழு கூட்டத்தை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

அதேபோல் திமுக துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியில் இருந்து விலகிய நிலையில், துணை பொதுச்செயலாளராக அடுத்த யாரை நியமிக்கலாம் என்பது குறித்தும் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: பள்ளிக்கூடங்களில் சாதிப் பாகுபாடு காட்டப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்...அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.