முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு - கடலூர் எம்பி ரமேஷுக்கு ஜாமீன்

author img

By

Published : Nov 19, 2021, 6:26 PM IST

Dmk Mp

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷுக்கு (Cuddalore Mp Ramesh) நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: கடலூர் மாவட்டம் பணிக்கன்குப்பம் பகுதியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி.ரமேஷுக்குச் (Dmk Mp Ramesh) சொந்தமான முந்திரி ஆலை உள்ளது. இங்குப் பணிபுரிந்துவந்த தொழிலாளி கோவிந்தராஜ் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். காவல் துறையினர் விசாரித்துவந்த இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

விசாரணையில், நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ், அவரது ஊழியர்கள் ஐந்து பேர் சேர்ந்து கோவிந்தராஜை அடித்து, விஷம் கொடுத்து கொலைசெய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தலைமறைவாக இருந்த ரமேஷ், கடந்த அக்டோபர் 11ஆம் தேதி பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

கடலூர் சிறையில் அடைக்கப்பட்ட அவர், ஜாமீன் கோரி கடலூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் (Madras High Court) ரமேஷ் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு உயர்நீதிமன்றத்தில் நீதிபதி நிர்மல்குமார் முன்பு (நவ.19) இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி, எந்த தலையீடும் இல்லாமல் விசாரணை நடைபெறுகிறது. மாநில அரசே வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியது. புலன் விசாரணை நியாயமாக நடக்கிறது எனத் தெரிவித்தார்.

மேலும் விசாரணை அலுவலர் மாற்றப்பட்டு விழுப்புரம் சிபிசிஐடி ஆய்வாளர் வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: Jaibhim Movie: 'ஜெய்பீம் பிரச்னைக்குத் தீர்வு எங்கள் கைகளில் இல்லை' - இயக்குநர் பாரதிராஜவுக்கு அன்புமணி கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.