உள்ளாட்சி தேர்தல் - திமுக கூட்டணி முன்னிலை!

author img

By

Published : Oct 12, 2021, 7:38 PM IST

Updated : Oct 12, 2021, 7:48 PM IST

திமுக முன்னிலை

தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி 93 மாவட்ட கவுன்சிலர் இடங்களிலும், 349 ஒன்றிய கவுன்சிலர் இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.

அக்டோபர் 6, 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில், 140 மாவட்ட கவுன்சிலர், ஆயிரத்து 381 ஒன்றிய கவுன்சிலர், 2 ஆயிரத்து 779 கிராம ஊராட்சித் தலைவர், 19 ஆயிரத்து 686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று (அக்.12) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

போட்டியின்றி தேர்வு

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் 2 ஆயிரத்து 874 பதவியிடங்களும், கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளில் 119 பதவியிடங்களும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களில் 5 பதவியிடங்களும், மாவட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களில் 2 பதவியிடங்களும் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மாலை 6 மணி நிலவரம்

செங்கல்பட்டு மாவட்டம் புனித தோமையார் மலை ஒன்றியம் திரிசூலம் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திமுக ஆதரவாளர் மா.உஷா 4 ஆயிரத்து 458 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றியம் இரண்டாவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட திமுகவைச் சேர்ந்த சௌமியா வெற்றி பெற்றார்.

திமுக (சௌமியா) - 5,086
அதிமுக (முத்துகனி) - 2,715
பாமக (பரமேஸ்வரி) - 288
அமமுக (பாக்கியம்) - 93
நாதக (கணேஷ்) - 225
மநீம - போட்டியிடவில்லை
தேமுதிக (கண்ணையா) - 2,296

அதிமுக வேட்பாளரை விட, திமுக வேட்பாளர் சௌமியா 2 ஆயிரத்து 375 வாக்குகள் வித்தியாசத்தில் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றோர் குறித்த புள்ளி விவர பட்டியல்
உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றோர் குறித்த புள்ளி விவர பட்டியல்
மாதனூர் ஒன்றியம் - திருப்பத்தூர் மாவட்டம் மொத்தம் ஊராட்சி

ஒன்றிய கவுன்சிலர் - 23 ஊராட்சிகள்
( நாயக்கேனரி போட்டி இல்லை)

6 வது வார்டு பெரிய வரிகம் ஊராட்சி ஒன்றியம்
திமுக வெற்றி - (திருக்குமரன்)


7 வது வார்டு துத்திபட்டு ஊராட்சி ஒன்றியம்
திமுக வெற்றி
(சாந்தி சீனிவாசன்)


1வது வார்டு மிட்டாளம் ஊராட்சி ஒன்றியம்
அதிமுக வெற்றி (மகாதேவன் )


5 வது வார்டு அயித்தம்பட்டு ஊராட்சி ஒன்றியம் திமுக வெற்றி
( மஞ்சுளா பரசுராமன் )


8 வது வார்டு தேவலாபுரம் ஊராட்சி ஒன்றியம்
(அதிமுக வெற்றி )
ஜெயந்தி கோபிநாத்


காஞ்சிபுரம்

உத்தரமேரூர் ஒன்றிய கவுன்சிலர் 1-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட ருத்ர கோடி 1674 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்

2வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட திருமலை 1692 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்

3வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட அண்ணாதுரை 924 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி வாகை சூடினார்.

4வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ராமச்சந்திரன் 71 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்

5 வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ரேவதி ரஞ்சித் 819 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்

6வது வார்டில் திமுக வெற்றி. போட்டியிட்ட வீரம்மாள் 1779 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

தற்போதைய நிலவரம்

திமுக முன்னிலை

மாவட்ட கவுன்சிலர் - 93

ஒன்றிய கவன்சிலர் - 349

அதிமுக கூட்டணி

மாவட்ட கவுன்சிலர் - 4

ஒன்றிய கவுன்சிலர் - 57

இதையும் படிங்க: 'ஒரே ஒரு ஓட்டு, பாஜகவுக்கு வேட்டு' - நெட்டிசன்கள் கிண்டல்!

Last Updated :Oct 12, 2021, 7:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.