ஓபிஎஸ் திமுகவின் பி-டீம்... முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்...

author img

By

Published : Jul 5, 2022, 12:54 PM IST

jayakumar

ஓபிஎஸ் திமுகவின் பி-டீம்... முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்...

ஓ. பன்னீர்செல்வம் திமுகவின் பி-டீமாக செயல்பட்டால் அதிமுக தொண்டர்கள் அவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னை: பட்டினப்பாக்கத்தில் அதிமுக முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "நமது அம்மா நாளிதழிலிருந்து வெளியேறிய மருது அழகுராஜ் ஓபிஎஸ் பக்கம் சாய்ந்து விட்டு கூலிக்கு மாரடிக்கும் வேலையை செய்து வருகிறார். நமது அம்மா பத்திரிக்கையிலிருந்த போது அவர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் வந்தன. விளம்பரம் பணத்தை சரியாக கையாளவில்லை. அதனாலேயே வெளியேற்றப்பட்டார்.

எடப்பாடி பழனிசாமியே ஒற்றைத் தலைமை: அதிமுவில் 98 விழுக்காடு பேர் ஒற்றைத் தலைமை வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமியே ஒற்றைத் தலைமையை ஏற்க வேண்டும் என்று அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எதிரொளித்தன.

கொடநாடு கொலை வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்தார். ஆனால் ஜாமீன் எடுத்தது திமுகவை சார்ந்த வழக்கறிஞர் இளங்கோவன். சசிகலா கட்சிக்கு வரக்கூடாது என்று தர்ம யுத்தத்தை அன்றைக்கு நடத்தினார் ஓபிஎஸ். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் முதலமைச்சர் அர்ப்பணிப்போடு செயல்படுகிறார் என்று கூறியது ஏற்கத்தக்கதா?.

தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை: “கருணாநிதி ஒரு தீய சக்தி” திமுக தலை தூக்கி விடக்கூடாது என்று எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் செயல்பட்டார்கள். ஓ.பன்னீர்செல்வம் திமுகவுடன் ரகசிய தொடர்பு வைத்துள்ளார் என்று சசிகலா அப்போதே கூறினார். தற்போதும் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. திட்டமிட்டபடி பொதுக்குழு நடைபெறும். திமுக ஆட்சிக்கு வந்ததும் கொடுத்த எந்த ஒரு தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அதிமுகவை பழிவாங்கும் எண்ணத்தில் மட்டுமே வழக்குகளை போட்டு வருகிறது. ஆனால் அனைத்தையும் முறியடிப்போம்.

திமுகவின் B டீம்: தமிழ்நாடு மக்களால் விரட்டப்பட்ட சக்தி டிடிவி. தற்போது யார் வேண்டுமானாலும் வாகனத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டு விடுகிறார்கள். அது வேஸ்ட் ஆப் டைம். 5 விழுக்காடு உறுப்பினர்களின் ஆதரவு கூட இல்லாமல் கட்சியை கட்டுப்படுத்த நினைப்பது தவறானது. உட்கட்சி விவாகரத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வது இரட்டை இலை சின்னத்தை முடக்க நினைக்கும் வேலை. திமுகவின் B - டீமாக இருந்தால் அவரை ஒரு தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" என ஜயக்குமார் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நீங்கள் யார்? - உதயநிதியிடம் மாணவி கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.