புதுக்கோட்டை சிறையில் விசாரணைக் கைதி உயிரிழப்பு... குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விசாரணை

author img

By

Published : Aug 22, 2022, 8:01 PM IST

Pudukottai Jail  undertrial prisoner  undertrial prisoner died  undertrial prisoner died in Pudukottai Jail  புதுக்கோட்டை சிறை  விசாரணை கைதி  விசாரணை கைதி உயிரிழப்பு  சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு  புதுக்கோட்டை சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு

புதுக்கோட்டையில் புகையிலைப்பொருட்களை விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக்கைதி சிறையில் உயிரிழந்த விவாகரத்தில், மரணம் குறித்து புதுக்கோட்டை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

புதுக்கோட்டை: தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட பான் மசாலா, குட்கா, புகையிலைப்பொருட்கள், புதுக்கோட்டையில் அதிக அளவு புழக்கத்தில் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உத்தரவின் பெயரில் தனிப்படை காவல் துறையினர் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் காவல் எல்லைக்குட்பட்ட மாரியம்மன் கோயில் தெருவில் வசிக்கும் கருப்பையா மகன் சின்னதுரை (வயது 52) மற்றும் துரைசாமி மகன் முருகப்பன் (வயது 50) ஆகிய இருவரும், காரையூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வந்ததாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதனைத்தொடர்ந்து அவர்கள் இருவரிடமும் காவல் துறையினர் சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட மேற்கண்ட புகையிலைப்பொருள்கள் ரூ.58 ஆயிரம் மதிப்புடைய 77 கிலோவை கைபற்றினர். மேலும் அவர்களிடமிருந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றம் முன் நிறுத்தி, புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட சின்னதுரைக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சின்னதுரையை புதுக்கோட்டை மாவட்ட சிறைத்துறை அலுவலர்கள் உடனடியாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றதாகவும், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து சின்னதுரை உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சின்னதுரை மரணத்திற்கு நீதி கேட்டும், காவல்துறையை குற்றம்சாட்டியும், அவரது உறவினர்கள் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று (ஆகஸ்ட் 22) தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மரணமடைந்த சின்னதுரை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இதய சிகிச்சை மேற்கொண்டார் என அவரது உறவினர்கள் கூறினர். மேலும், காவல் துறையினர் செய்த அலைக்கழிப்பு மற்றும் சின்னதுரைக்கு கொடுத்த மன உளைச்சலுமே அவருடைய மரணத்திற்குக் காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளனர்.

புதுக்கோட்டையில் புகையிலைப்பொருட்களை விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக்கைதி சிறையில் உயிரிழந்த விவகாரத்தில், மரணம் குறித்து புதுக்கோட்டை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இதையும் படிங்க: புதுச்சேரி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.