தமிழ்நாட்டில் இன்று 744 பேருக்கு கரோனா பாதிப்பு

author img

By

Published : Nov 24, 2021, 10:32 PM IST

கரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் இன்று 744 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை: சுகாதாரத்துறை இன்று (நவ.24) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், "தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து ஆயிரத்து 363 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் இருந்த 744 நபர்கள் மேலும் கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் இதுவரை 5 கோடியே 27 லட்சத்து 31 ஆயிரத்து 193 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 27 லட்சத்து 22 ஆயிரத்து 506 பேர் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் தற்போது மருத்துவமனையில் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 8,484 சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 782 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 77 ஆயிரத்து 607 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தனியார் மருத்துவமனையில் ஐந்து நோயாளிகளும் அரசு மருத்துவமனையில் 9 நோயாளிகளும் என 14 நோயாளிகள் இறந்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து இறந்தவர்கள் எண்ணிக்கை 36 ஆயிரத்து 415 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் புதிதாக 115 நபர்களுக்கும் கோயம்புத்தூரில் 117 நபர்களுக்கும் என கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளது" என் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டம் வாரியாக மொத்த பாதிப்பு விவரம்:

சென்னை - 5,57,437

கோயம்புத்தூர் - 2,49,514

செங்கல்பட்டு - 1,73,418

திருவள்ளூர் - 1,20,047

ஈரோடு - 1,05,921

சேலம் - 1,01,039

திருப்பூர் - 96,806

திருச்சிராப்பள்ளி - 78,332

மதுரை - 75,471

காஞ்சிபுரம் - 75,476

தஞ்சாவூர் - 76,001

கடலூர் - 64,361

கன்னியாகுமரி - 62,725

தூத்துக்குடி - 56,472

திருவண்ணாமலை - 55,154

நாமக்கல் - 53,219

வேலூர் - 50,122

திருநெல்வேலி - 49,608

விருதுநகர் - 46,386

விழுப்புரம் - 45,987

தேனி - 43,598

ராணிப்பேட்டை - 43,530

கிருஷ்ணகிரி - 43,790

திருவாரூர் - 41,821

திண்டுக்கல் - 33,205

நீலகிரி - 33,996

கள்ளக்குறிச்சி - 31,542

புதுக்கோட்டை - 30,313

திருப்பத்தூர் - 29,374

தென்காசி - 27,387

தருமபுரி - 28,749

கரூர் - 24,516

மயிலாடுதுறை - 23,357

ராமநாதபுரம் - 20,620

நாகப்பட்டினம் - 21,287

சிவகங்கை - 20,362

அரியலூர் - 16,918

பெரம்பலூர் - 12,101

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,031

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,085

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க: வெள்ளத்தில் சிக்கி கரை சேர்ந்த குரங்கு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.