ETV Bharat / state

மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

author img

By

Published : Jul 24, 2021, 1:19 PM IST

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை  கனமழை  தமிழ்நாட்டில் கன மழை  தென்மேற்கு பருவக்காற்று  சென்னை வானிலை ஆய்வு மையம்  வங்க கடல்  அரபிக்கடல்  மீனவர்களுக்கான எச்சரிக்கை  சென்னை செய்திகள்  சென்னையில் மழை  வானிலை நிலவரம்  rain  heavy rain  weather report  chennai Meteorological Center  chennai news  chennai latest news  tamilnadu rain status  rain update  rain status
மழை

சென்னை: தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 24) நீலகிரி, கோயமுத்தூர், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் திருநெல்வேலி, தூத்துக்குடி, ஈரோடு, சேலம், மதுரை, விருதுநகர், தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், எஞ்சிய மாவட்டங்களில் பெரும்பாலும் லேசான மழையுடன், வறண்ட வானிலையும் நிலவக் கூடும்.

மழை  கனமழை  தமிழ்நாட்டில் கன மழை  தென்மேற்கு பருவக்காற்று  சென்னை வானிலை ஆய்வு மையம்  வங்க கடல்  அரபிக்கடல்  மீனவர்களுக்கான எச்சரிக்கை  சென்னை செய்திகள்  சென்னையில் மழை  வானிலை நிலவரம்  rain  heavy rain  weather report  chennai Meteorological Center  chennai news  chennai latest news  tamilnadu rain status  rain update  rain status
கனமழை

தமிழ்நாட்டில் மழை

25.07.2021: நீலகிரி, கோயமுத்தூர், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

இதனை தொடர்ந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, ஈரோடு, சேலம், மதுரை, விருதுநகர், தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், எஞ்சிய மாவட்டங்களில் பெரும்பாலும் லேசான மழையுடன், வறண்ட வானிலையும் நிலவக் கூடும்.

26.07.2021 முதல் 28.07.2021: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், சேலம், தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், எஞ்சிய மாவட்டங்களில் பெரும்பாலும் லேசான மழையுடன், வறண்ட வானிலையும் நிலவக் கூடும்.

சென்னை வானிலை

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 36, குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

வங்கக்கடல்

24.07.2021: தமிழ்நாடு, ஆந்திரா கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

24.07.2021 முதல் 25.07.2021 வரை: மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

மழை  கனமழை  தமிழ்நாட்டில் கன மழை  தென்மேற்கு பருவக்காற்று  சென்னை வானிலை ஆய்வு மையம்  வங்க கடல்  அரபிக்கடல்  மீனவர்களுக்கான எச்சரிக்கை  சென்னை செய்திகள்  சென்னையில் மழை  வானிலை நிலவரம்  rain  heavy rain  weather report  chennai Meteorological Center  chennai news  chennai latest news  tamilnadu rain status  rain update  rain status
மீனவர்கள் கவனத்திற்கு

24.07.2021 முதல் 26.07.2021 வரை: தெற்கு வங்க கடல் மற்றும் மத்திய வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், இடைஇடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல்

24.07.2021 முதல் 26.07.2021 வரை: கர்நாடகா, கேரளா கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

24.07.2021 முதல் 28.07.2021 வரை: தென் மேற்கு அரபிக்கடல், மத்திய அரபிக்கடல் மற்றும் வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், இடைஇடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

இதனால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க: பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.